மாப்பிள்ளை தேடும் ப்ரியா பவானி ஷங்கர் ! அப்போ பழைய காதல் ? பரபரப்பாகும் கோலிவுட் !

22 December 2020, 3:38 pm
Quick Share

பிரியா பவானி ஷங்கர், டிவி சீரியல் நடிகையாக அறிமுகமாகி, மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமா நாயகியாக புரோமோட் ஆனார். மேயாத மான் படத்தை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் முக்கிய கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்தார்.

பிறகு மான்ஸ்டர் திரைப்படம், அவருக்கு கடந்த ஆண்டு நல்ல பெயரை கொடுத்துள்ளது. அதை தொடர்ந்து தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2, குருதி ஆட்டம், களத்தில் சந்திப்போம், கசடதபற என வரிசையாக அரை டஜன் படங்கள் க்யூ கட்டி நிற்கிறது.

இந்த நிலையில் பிரியா பவானி ஷங்கர் தன்னுடைய கல்லூரி கால நண்பரான ராஜவேல் என்பவரை காதலித்து வந்ததாகவும், அதன்பின்னர் திடீரென இருவருக்கும் பிரேக்கப் ஆகிவிட்டதாக ஒரு வதந்தி கிளம்பியது.

இந்த நிலையில் சற்றுமுன் ப்ரியா பவானிசங்கர் தனது சமூக வலைத்தளத்தில் பிரபல போட்டோகிராபர் எடுத்த அழகிய புகைப்படத்தை பதிவு செய்து, “தகுதியான மணமகன்கள் வரவேற்கப்படுகிறார்கள்” என்று பதிவு செய்துள்ளார். ப்ரியாவின் இந்த பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பழைய காதல் என்னாச்சு என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Views: - 45

0

0