இது பிரியா பவானி சங்கரின் கதறல்ஸ்.. கிண்டல் செய்தவருக்கு பதிலடி..!
Author: Vignesh13 ஜூலை 2024, 12:20 மணி
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகர் நடிகைகளை போலவே, தொகுப்பாளர்கள, செய்தி வாசிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அந்த வகையில், தமிழ் நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் பிரியா பவானி ஷங்கர். இதில், இவர் பேசும் அழகு, நேர்த்தியான லுக் போன்றவற்றால் இவருக்கு தனி ரசிகர் பாலோயர்ஸ் உருவாகினர்.
பின்னர், ரசிகர்கள் ஆதரவால் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்னும் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 2017ம் ஆண்டு, வைபவ் ஜோடியாக மேயாத மான் படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, கசடதபற, ஓ மணப்பெண்ணே, யானை, திருச்சிற்றம்பலம் , பத்து தல, அகிலன், ருத்ரன், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து உள்ளார்.
இந்நிலையில், நேற்று வெளியான இந்தியன் 2 படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்து வருகிறது. இந்தியன் 2 படத்தில் இடம்பெற்றுள்ள கதறல்ஸ் பாட்டுக்கு ப்ரியா பவானி சங்கர் நடனமாடிய வீடியோவை பதிவிட்டு நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இதற்குப் பிரியா பவானி சங்கர் அடப்பாவிங்களா its just PBD in kadharalz என்று பதில் அளித்துள்ளார். பிரியா பவானிசாகரின் இந்த பெருந்தன்மை பார்த்த ரசிகர்கள் நெகிழ்ந்து வருகின்றனர்.
0
0