நயன்தாராவின் ரூட்டை கையில் எடுத்த ப்ரியா பவானி ஷங்கர் – பெருசா ஒரு சம்பவம் பண்ண போறாங்க !

7 April 2021, 10:11 am
Priya Bhavani Shankar - Updatenews360
Quick Share

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர். நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார். அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார் ஆனால் அது சரியாக ஓடவில்லை. அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இதுவரை ஒன்னு ரெண்டு பாட்டுக்கு ஆடி கமர்ஷியல் ஹீரோயினாக வலம் வந்த பிரியா பவானி சங்கர் அடுத்ததாக கதாநாயகி சம்மந்தப்பட்ட கதை ஒன்றில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை நயன்தாராவின் ஐரா படத்தை இயக்கிய சர்ஜுன் என்பவர் இயக்கவுள்ளார்.

திடுக்கிடும் திகில் படமாக உருவாகும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மெட்ரோ சிரிஷ் நடிக்க உள்ளார். ஏற்கனவே அடுத்த நயன்தாரா என ரசிகர்கள் கொண்டாடும் நிலையில் தொடர்ந்து அவரின் ரூட்டை கையில் பிடித்து ஓடினால், நாமளும் அவரை போல லேடி சூப்பர்ஸ்டார் ஆகிவிடலாம்ன்னு கணக்கு போட்டு உள்ளாராம்.

மேலும், இந்த படம் மட்டும் ஒர்க்கவுட்டானால் இனிமேல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கலாம் என முடிவெடுத்துள்ளாராம்.

Views: - 66

10

1