கர்நாடகாவை சேர்ந்தவரான நடிகை பிரியாமணி 2004 ஆண்டு “கண்களால் கைது செய்” என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்பு இவர் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ” அது ஒரு கனாக்காலம் ” படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
முதல் இரண்டு படத்திலும் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பிரபலம் ஆகவில்லை பின்பு 2007-ம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் பருத்திவீரன். இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி. இந்த படத்தில் பிரியாமணி முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக ‘சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது’ கொடுக்கப்பட்டது.
மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் , ராவணன் , சாருலதா போன்ற படங்கள் ப்ரியாமணிக்கு கைகொடுக்கவில்லை , நடிக்கும் படங்கள் அனைத்தும் சுமாரான விமர்சனங்களையே பெற்றது. பிரியாமணி முதல் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த படம் “சாருலதா” அந்த படமும் தோல்வியில் முடிய தனது மார்க்கெட்டை இழந்தார்.
இதனால் தமிழ் சினிமாவிற்கு டாடா காட்டிவிட்டு தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். தமிழில் கவர்ச்சி காட்டாத பிரியாமணி தெலுங்கில் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து நடித்தார். சில காலமாக ஒரு சில படங்களிலேயே நடித்த பிரியாமணி மலையாளப்படங்களிலும் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் . அதன் பின் இவர் நடித்த FAMILYMAN 2 Web Series முரண்பாடான விமர்சனங்கள் இருந்திருந்தாலும் ஒரு தொடராக பார்க்க விறுவிறுப்பாக நன்றாகவே இருந்தது .
இதனிடையே முஸ்தபா ராஜ் என்பவரை 2017ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் மட்டும் நடித்து வருகிறார். தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் திரைப்படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டிருக்கிறாராம். இந்த டான்ஸ் சமந்தாவின் ஊ சொல்றியாமாமா பாடலின் நடனத்தையே மிஞ்சும் அளவுக்கு உள்ளதாக செய்திகள் வெளியாகியது.
இந்நிலையில் பிரியாமணி திருமணத்திற்கு பின்னர் படுக்கையறை காட்சிகள் மற்றும் முத்த காட்சிகளில் நடிக்க மறுப்பு தெரிவித்து வருகிறாராம். அதற்கான கரணம் என்னவென்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது, படுக்கையறை காட்சிகளில் நான் நடித்தால் அதை என் குடும்பத்தினர் பார்த்து முகம் சுளிப்பார்கள். எனவே அதுமாதிரியான காட்சிகளில் நான் ஒருபோதும் நடிக்க மாட்டேன். குறிப்பாக முத்த காட்சிகளில் இன்னொரு ஆண் உடன் நடித்தால் என் கணவருக்கு நான் பதில் சொல்ல வேண்டும்” என அவர் கூறியுள்ளார். இது சமந்தா மற்றும் தமன்னா போன்ற நடிகைகளுக்கு பளார் விட்டது போல் உள்ளது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.