சரக்கா (அ) சர்க்கரை நோயா?… ரோபோ ஷங்கரின் நிலை குறித்து ரகசியத்தை உடைத்த மனைவி..!

Author: Vignesh
21 March 2023, 1:30 pm

விஜய் தொலைக்காட்சியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் ரோபோ ஷங்கர். தற்போது தமிழ் சினிமாவில் பிசியான காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவரது மனைவி பிரியங்காவும் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர்களது மகள் இந்திரஜாவும் தளபதி விஜயின் பிகில் படத்தில் பாண்டியம்மாவாக நடித்து தற்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதையடுத்து தமிழ் திரைப்படங்களில் நடிகர் ரோபோ ஷங்கர் வாய்ப்பு கிடைக்க நடித்து வருகிறார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வாயை மூடி பேசவும், மாரி, புலி போன்ற திரைப்படங்களில் காமெடியனாக நடித்திருக்கிறார். அண்மையில் கூட அனுமதியின்றி அலெக்சாண்டரியன் வகை பச்சை கிளிகளை வளர்த்து சர்ச்சையில் சிக்கினார்.

இந்நிலையில் ஆளே அடையாளம் தெரியாத வகையில் படு ஒல்லியாக எலும்பும் தோலுமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பலர் என்ன இப்படி ஆகிவிட்டார் என ஷாக்கில் உள்ளனர்.

robo shankar-updatenews360

இதனிடையே, சிலர் சரக்கா அல்லது சர்க்கரை நோயா என கலாய்த்தும் வந்தனர். இதுகுறித்து அண்மையில் ஒரு பேட்டியில் ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்கா, தனது கணவர் குறித்து நிறைய வதந்திகள் பரப்பப்படுவதாகவும், அவருக்கு எந்த நோயும் இல்லை என்றும், இது அவர் நடித்து வரும் புதிய படத்திற்கான கெட்டப் என்று தெரிவித்துள்ளார்.

  • வாந்தி தான் வருது…பேட் கேர்ள் படம் ரிலீஸ் ஆகவே கூடாது…பிரபல நடிகை காட்டம்..!