சிம்புவை வைத்து படம் இயக்கபோகும் மாநாடு பட தயாரிப்பாளார் ! சிலம்பரசன் Is Back !

29 January 2021, 1:30 pm
Quick Share

இந்த 2021-ஆம் வருடம் யாருக்கு நல்லபடியாக அமைந்ததோ இல்லையோ சிம்புவிற்கும் சிம்புவின் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. ஒருபக்கம் ஈஸ்வரன் தோல்வியடைந்தாலும் படம் வெளிவந்ததே வெற்றியாகக் பார்க்கும் சிம்பு ரசிகர்களும், மறுபக்கம் அடுத்தடுத்து சிம்பு நடிக்கும் படங்களை பற்றி அப்டேட்களை வாரி குவிக்கும் சிம்புவை பார்க்கும் மற்ற ரசிகர்களுக்கு பொறாமையாகவே உள்ளது.

சில வருடங்களுக்கு முன், சிம்பு குண்டாக இருந்ததால் அவரின் ரசிகர்கள் மிகவும் வருத்தமடைந்தார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து இருந்தார். இதை தொடர்ந்து சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படம், சில்லுன்னு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் ‘ பத்து தல ‘ என மற்றொரு படம் என அதகளம் செய்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் அடுத்து கௌதம் மேனன் ஒரு படம் என்று நேற்று ஒரு அறிவிப்பு வர, தற்போது மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்கப்போகிறார் எனவும் அந்த படம் “முற்றாத இரவொன்றில்” எனும் நாவலை தழுவி எடுக்கப் போவதாகவும் தகவல் வந்துள்ளது. இது உண்மை எனில் இந்த வருடம் சிம்புவுக்கு நான்கு படங்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

Views: - 0

0

0