பிகினியில் நயன்தாரா நடித்தது குறித்து கேள்வி – அஜித் கொடுத்த நேர்த்தியான பதில்…!

2 August 2020, 4:11 pm
Quick Share

சில வருடங்களுக்கு முன்பு அஜித் NDTV சேனலுக்கு பேட்டி கொடுத்தார், அது எப்போது என்றால், அவர் கார் ரேசிங் ஈர்புள்ள நேரத்தில், துளியும் சினிமா பற்றி இல்லாமல் முழுக்க முழுக்க ஸ்போர்ட்ஸ் சம்மந்தமான பேட்டி ஒன்றை கொடுத்தார்.

அதில் அந்த பேட்டியை ஒளிப்பதிவு செய்த ஜான் என்பவர், அந்த பேட்டியின் முடிவின் போது, பில்லா படத்தில் பயங்கர Famous ஆன “நீச்சல் உடை காட்சிகள் எப்படி தைரியமாக எடுத்தீர்கள்?” என்று கேட்டாராம். அதற்கு அஜித் “நான் ஒரு நடிகன், நயன் ஒரு நல்ல நடிகை, இயக்குனர் சொன்னதை செய்தோம், மற்றப்படி அதில் ஒன்றும் இல்லை” என பதில் கூறினாராம்.

இதை தற்போது, அவர் தன் ட்விட்டர் தளத்தில் தெரிவிக்க, அந்த பதிவு செம்ம ரீச் ஆகி வருகிறது. வலிமை படம் முடிந்ததும் மீண்டும் விஷ்ணுவர்தனுடன் அஜித் இணைய வாய்ப்புகள் இருக்கிறது என்று இணையதளத்தில் வேறு ஒரு தகவலும் உலவி வருகிறது.