நடிகர் தனுஷ் தனது 50வது திரைப்படத்தை மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையில் இயக்கி நடித்து வெளிவந்திருந்தது. ராயன் திரைப்படம் வெளியான நாட்களில் இருந்தே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்து வருகிறது.
அதிரடி ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் தனுஷ் உடன் சேர்ந்து காளிதாஸ் ஜெயராம் ,சந்தீப் கிஷன் , துசாரா விஜயன், அப்பனா பாலமுரளி உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் நடித்திருக்கின்றனர்.
இந்த நிலையில் “ராயன் ” திரைப்படம் 7 நாட்களை கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி மாபெரும் சாதனை படைத்திருக்கிறது. தற்போது 8 நாட்களில் தனுஷின் ராயன் திரைப்படம் உலக அளவில் செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாக எல்லோரையும் வியக்க வைத்துள்ளது. அதன்படி, தனுஷின் ராயன் திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ. 107 கோடிக்கும் மேல் வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது.
0
0