தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், பின்னணி பாடகர், இயக்குனர், திரைப்பட பாடல் ஆசிரியர் இப்படி பல பரிமாணங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருப்பவர் தான் நடிகர் தனுஷ். தனுஷ் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த “பவர் பாண்டி” திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.
அந்த திரைப்படத்திலேயே மாபெரும் வெற்றியை நிலை நாட்டினார். அந்த படத்தை தொடர்ந்து தற்போது தனுஷ் “ராயன்” என்ற திரைப்படத்தை அவரே இயக்கி நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் தனுஷின் ஐம்பதாவது படமாக உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படம் இந்த திரையரங்கில் வெளியாகி தனுஷ் ரசிகர்களையும் ஒட்டுமொத்த சினிமா விரும்பிகளையும் கொண்டாட வைத்திருக்கிறது.
ஆம், இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும் படமாக முதல் நாளிலேயே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தில் நடிகர் தனுஷுடன் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் தனுஷின் இயக்கம் நடிப்பு இரண்டுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது .
குறிப்பாக ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த படம் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில் இப்படத்தை குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி, படம் செல்வராகவன் ஸ்டைலில் இருக்கும் என எதிர்பார்த்தால் அவரையே மிஞ்சி விட்டார் தனுஷ். ஆம், தனது குரு வெற்றிமாறன் சாயலில் படம் எடுத்துள்ளார் .
குறிப்பாக இந்த படத்தில் இன்டெர்வெல் காட்சியில் தனுஷ் ஒரு இயக்குனராகவும், நடிகராகவும் மிரட்டி எடுத்துவிட்டார். வட சென்னை படத்திற்கு பிறகு ஒரு தரமான interval block என கூறும் ரசிகர்கள் “எங்கயா இருந்த இவ்ளோ நாள்..?” என படத்தை பார்த்த ஆடியன்ஸ் மெர்சாகி தனுஷை புகழ்ந்து தள்ளியுள்ளனர்.
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
பிரபல இயக்குநர் சொன்ன கதைப்படி படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு வரவேண்டும் என்பதால் படத்தில் இருந்து விலகியுள்ளார் சூப்பர் ஸ்டார்.…
தேர்தலை நோக்கி விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி விஜய் நடைபோட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இரண்டு…
விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பெரிய திரையில் வாய்ப்பு பெற்றவர் நடிகர் யோகி பாபு. டைமிங் காமெடி மூலம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
This website uses cookies.