விஜய் டிவியின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவான பிக் பாஸூக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு தான். இதன் காரணமாக அடுத்ததடுத்த சீசன்கள் தொடர்ந்து தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் ஆரம்பமாகியுள்ளது.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இதனுடைய Grand Opening சமீபத்தில் ஒளிபரப்பானது. 20 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசனில் சீரியல் நடிகை ரச்சிதா பங்கேற்று உள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஹிட் சீரியல்களான சரவணன் மீனாட்சி, பிரிவோம் சந்திப்போம், நாம் இருவர் நமக்கு இருவரில் நடித்துள்ளார்.
இது சொல்ல மறந்த கதை என்ற தொடரில் கலர்ஸ் டிவியில் நடித்து நல்ல பெயர் பெற்றார். சீரியல் நடிகர் தினேஷை நடிகை ரச்சிதா காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த இருவருக்கும் இடையில் சண்டைகள் ஏற்பட்டதால் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.
விரைவில் நடிகர் தினேஷை நடிகை ரச்சிதா விவாகரத்து பெறப்போவதாகவும் கூறி வந்த நிலையில், தினேஷ் அப்படியான முடிவை தான் இன்னும் எடுக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக ரச்சிதா களமிறங்கிய நிலையில், இதுவரை ஹோம்லி பெண்ணாக இருந்த ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போகும் முன் கிளாமர் ஆட்டம் போட்ட வீடியோவை இணையதளத்தில் பகிர்ந்துவிட்டு சென்றுள்ளார்.
ஹோம்லி ரச்சிதா மகாவா இது என்று இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.