இரண்டு குழந்தை பெற்ற பிறகு உடல் எடையை குறைத்துள்ள ராதிகாவின் மகள்

29 January 2021, 5:20 pm
Quick Share

80ஸ், 90ஸ் ஆட்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகைகளில் மிக முக்கியமானவர் ராதிகா சரத்குமார். ரஜினி, கமல், விஜயகாந்த் என முன்னணி நடிகர்களுடன் நடித்து முடித்து விஜய், அஜித், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என்ன இந்நாள் நடிகர்கள் வரைக்கும் அனைவருடனும் நடித்துவிட்டார். பெரிய திரையில் மட்டுமில்லாமல் தற்போது சின்னத்திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார் ராதிகா.

இவரின் முதல் கணவரான பிரதாப் போத்தனை 1985ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின் திருமணமான ஒரே வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்றனர். அதன்பின் லண்டனை சேர்ந்த ரிச்சர்ட் ஹார்டியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ரேயான் என்ற மகள் பிறந்தாள். ஆனால் ரிச்சர்ட் உடன் விவாகரத்து பெற்றார். அதன்பின் தான் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார்.

சில ஆண்டுகளுக்கு முன் ரேயானுக்கும் கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யுவிற்கு திருமணம் நடைபெற்றது. ரேயான் மற்றும் அபிமன்யு தம்பதியருக்கு ஏற்கனவே ஆண் குழந்தை பிறந்து இருந்த நிலையில் சமீபத்தில் இரண்டாவது குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து உடல் பருமனாகி இருந்த ரேயான் தற்போது உடல் எடையை குறைத்திருக்கிறார். அதுவும் 16 கிலோ குறைத்திருக்கிறார் என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் ரேயான்.

Views: - 92

0

0