தமிழ் சினிமா உலகில் மிக பிரபமாலான வில்லனாக இருந்தவர் ரகுவரன். இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் முதன்முதலில் 1982 ஆம் ஆண்டு வெளியான அக்கா என்ற மலையாள படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.
அதன் பின்னர் இவர் தமிழில் ஏழாவது மனிதன் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
மேலும், இவர் ஆரம்பத்தில் ஹீரோ மற்றும் துணை கதாபாத்திரத்தில் தான் நடித்து இருந்தார். அதன் பின்னர் இவர் வில்லனாக நடிக்க துவங்கினார். ஆனால், ஹீரோ கதாபாத்திரத்தை விட வில்லன் கதாபாத்திரம் தான் இவருக்கு நன்றாக பொருந்தியது. அதனால் தொடர்ச்சியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
90ஸ் ரசிகர்களுக்கு நடிகர் ரகுவரன் ஒரு மிரட்டலான வில்லனாக இருந்தார்.
ரகுவரன் திரைப்பயணம்:
மேலும், இவர் தமிழில் உள்ள ரஜினி, கமல், விஜயகாந்த் சரத்குமார், கார்த்தி என்று பல நடிகர்களின் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதனிடையே ரகுவரன் கடந்த 1996ஆம் ஆண்டு நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டார்.
நடிகை ரோகிணியும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக தான் திகழ்ந்து வந்தவர். திருமணமான இரண்டு வருடத்தில் இவர்களுக்கு ரிஷிவரன் என்ற குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்த ஆறு வருடங்களில் ரகுவரன் மற்றும் ரோகிணி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.
ரகுவரன் மறைவு:
பிரிவிற்கு பின் நடிகர் ரகுவரன் கவனிக்க ஆளில்லாமல் தனியாகத்தான் வசித்து வந்தார். பின்னர் 2008 ஆம் ஆண்டு சர்க்கரை நோய் காரணமாக நடிகர் ரகுவரன் உயிர் பிரிந்தார். இவரின் மறைவுக்கு திரை பிரபலங்கள் பலர் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள்.
ரகுவரன் காதல்:
ரகுவரன் நடிப்பில் 1987 -ம் ஆண்டு கூட்டுப் புழுக்கள் என்ற படம் வெளியானது . இதில் நடிகை அமலா கதாநாயகியாக நடித்திருப்பார். கூட்டுப் புழுக்கள் படத்தின் போது ரகுவரனுக்கு அமலா மீது காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது அவரின் காதலை ரகுவரன் அமலாவிடம் தெரிவித்தாராம். அதற்கு அமலா மறுப்பு தெரிவித்ததால் ரகுவரன் மிகுந்த மனவுளைச்சலுக்கு ஆளானராம். இது குறித்து அவரே பேட்டிகளில் பகிர்ந்துள்ளார்.
இதையடுத்து 1993 -ம் ஆண்டு அமலா நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சிவகாசியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
கிரிக்கெட்டின் தல கிரிக்கெட் ரசிகர்களால் தல என அழைக்கப்படுபவர் தோனி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக திகழ்ந்தவர்…
தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம், கொண்டாபூர் மண்டலம் கரகுர்த்தி கிராமத்தை சேர்ந்த சுபாஷ் (42), தனது மகன் மரியன் (13),…
திண்டுக்கல் மாநகராட்சி காமராசர் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மலைப்பகுதிக்கு செல்லும் 9 புதிய புற நகர் பேருந்துகள்,…
ஜேசன் சஞ்சய்யின் என்ட்ரி விஜய் தனது அரசியல் வாழ்க்கைக்காக சினிமாவை விட்டு விலகவுள்ள நிலையில் அவரது மகனான ஜேசன் சஞ்சய்…
கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசியவர், பாகிஸ்தான் மீதான இந்திய ராணுவத்தின்…
This website uses cookies.