பிரம்மாண்ட ஹிட் திரைப்படமான பாகுபலி படத்தின் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ஆர்ஆர்ஆர். ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடித்த இப்படத்தில் படத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டுக்கூத்து’ பாடலுக்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்திருந்தார். ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில், RRR படத்தின் ‘நாட்டு கூத்து’ பாடல் ஆஸ்கர் விருது கிடைத்தது. இதைத் தொடர்ந்து, நாட்டு நாட்டு பாடல் உலகம் முழுவதும் பிரபலமானது.
தென்னிந்திய சினிமா பாடல் ஒன்றுக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததை ஒட்டுமொத்த இந்திய சினிமாவிற்கும் பெருமை சேர்த்ததாக திரையுலகினர் அனைவரும் மகிழ்ச்சியை கொண்டாடினார்கள். இந்த விருதை வாங்க ப்ரோமோஷனுக்காக மட்டும் இப்படக்குழு ரூ. 80 கோடி செலவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்படத்தின் ஹீரோயின் நடிகை ஆலியா பட் பேட்டி ஒன்றில் இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார். அப்போது இயக்குனர் ராஜமௌலி தனக்கு ஒரு சிறப்பான அட்வைஸ் கொடுத்ததாக கூறியுள்ளார். “நான் நடிப்பதற்கு எதாவது அட்வைஸ் இருந்தால் கொடுங்க என கேட்டேன் ராஜமௌலி சாரிடம் கேட்டேன். அதற்கு வர, ‘நீ எதை தேர்வு செய்தாலும் அதை முழு love உடன் செய்ய வேண்டும். படம் தோல்வி அடைந்தாலும், ஆடியன்ஸ் உன் கண்களில் இருக்கும் அந்த loveஐ கண்டிப்பாக கவனிப்பார்கள் என சொன்னார். நான் நினைக்கிறன் அந்த அட்வைஸ் தான் இந்த வெற்றிக்கு வழி வகுத்திருக்கும் என என்றார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.