2015ம் ஆண்டு விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் மூலம் செம பிரபலம் அடைந்தார். அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார்.
இப்படி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியவர் கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு ரஜினி, விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலம் அடைந்தார், சில வருடங்களுக்கு முன்பு நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.
தற்போது கீர்த்தி சுரேஷ், ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்துதெடுத்து நடித்து வருகிறார். இதனிடையே, கீர்த்தி சுரேஷ் அறிமுகமாகிய ஆரம்பத்தில் இருந்து ஒரு சில படங்கள் தவிர அவர் நடிப்பில் வெளியான முன்னணி நடிகர்களின் படங்கள் தோல்வியை தான் சந்தித்தது.
அதிலும், ஹீரோயினாக நடித்து வராமல் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து பயங்கர மொக்கை வாங்கினார். அதைத் தொடர்ந்து, தெலுங்கு மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி படத்தில் தங்கையாக காமிட்டானார்.
அஜித்தின் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் உருவாகி வெளியான போலோ சங்கர் படம் தற்போது, வரை வெளியாகி 45 கோடிக்கு மேல் மட்டுமே வசூலித்து அட்ட பிளாப் படமாக அமைந்துள்ளது. இதனால் கீர்த்தி சுரேஷ் கால் வைக்கும் இடம் எல்லாம் கன்னிவெடியாகவே இருந்து வருவதாக பலர் கிண்டல் அடித்து வருகிறார்கள்.
மேலும், சமீபத்தில் தான் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான மாமன்னன் படத்தில் ஐம்பதாவது நாள் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. அதில், ஒரு படம் 200 நாட்கள் ஓடிய காலம் போய் 50 நாட்கள் ஓடினாலே பெரிய விஷயமாகிவிட்டது என்று பலரும் நக்கல் பேசி வந்தனர். மேலும், கண்ணிவெடி என்ற படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.