எந்திரன் போட்டோஷுட்டின் போது எடுக்கப்பட்ட Rare புகைப்படங்கள் ! இப்போ கூட பார்க்க Fresh ஆ இருக்கு !

25 June 2020, 10:20 am
Quick Share

எந்திரன் திரைப்படம் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், தமிழ்த் திரையுலகே வியக்கும் பல சாதனைகள் புரிந்தது. அதற்கு முன்பு வரை யாருடைய படங்களும் அந்த அளவில் வெற்றியும், வசூலும் பெற்றதில்லை. எந்திரன் அதை முறியடித்து புதிய அத்தியாயத்தை உருவாக்கியது.

ரசிகர்களின் அளவிட முடியாத அன்பைப் பெற்றவர் ரஜினி. படம் அறிவிக்கப்பட்டது முதல், ரிலீஸ் தேதி வரை என்ன நடக்குமோ என்ற படபடப்பை சுமந்தே காலம் தள்ளிக்கொண்டிருந்தனர் ரஜினி ரசிகர்கள்.

2010 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆனபோது ஒவ்வொரு ரஜினி ரசிகனும் அடைந்த பேரானந்தத்தை என்னவென்று சொல்வது. தமிழ் சினிமா அதுவரை கண்டிராத மாஸ் வில்லனையும் ஹீரோவையும் ஒரே முகத்தில், ரஜினி உருவத்தில் காட்டியிருந்தார் ஷங்கர். ரசிகர்களுக்கு அந்த நாள் தீபாவளியாக கொண்டாடும்படி படம் அமைந்தது.

இந்த படம் வந்து ALMOST 10 வருஷம் ஆச்சு. ஆனால் இந்த படத்தை பற்றி இன்னும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

தற்போது இந்த படத்தின் Photoshoot இன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலது வெளியாகி இருக்கிறது.