கபாலி, ஆல் இல் ஆல் அழகுராஜா உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. இதுதவிர, தெலுங்கு, மராத்தி, இந்தி உள்ளிட்ட திரையுலகிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், உண்மையில் வயது முதிர்வை எதிர்கொள்ள நான் அதிகம் போராடி வருகிறேன். திரையுலகில் அழகிற்காக அறுவை சிகிச்சைகளை செய்து கொள்வது அதிகம்.
தங்களது முகம் மற்றும் உடல் பாகங்களை மாற்றம் செய்து கொள்வதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட பல சக நடிகைகளை பற்றி எனக்கு தெரியும் என கூறியுள்ளார்.
சமீபத்தில் அவரிடம் பிற நடிகைகளை அதிகம் கொண்டாடுவது பற்றியும், அவரை புறக்கணித்த அனுபவம் பற்றியும் கேட்கப்பட்டபோது, அதற்கு பதிலளித்த அவர், அதில் உண்மை இருக்கிறது. வயது ஒரு காரணியாக உள்ளது.
மிக பெரிய வணிக ரீதியிலான படங்களில் இளம் நடிகைகள் வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். இந்த உண்மையை நீங்கள் மறுக்க முடியாது. இளம் மற்றும் இயல்பான தோற்றம் கொண்டவரை அவர்கள் விரும்புகிறார்கள் என்பது உண்மை.
ஒரு காலத்தில் உங்களிடம் அது இல்லை. இது குறைவாக உள்ளது என கூறியது உண்டு. அதனால், எங்களுக்கு அவர்கள் கூறிய, அது தேவையாக இருந்தது. இதற்காக எண்ணற்ற நடிகைகள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர் என்பது உங்களுக்கே தெரியும்.
ஓர் அழகான தோற்றம் கொண்டவர் வேண்டும் என்ற தேடுதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. அந்த தேடுதலுக்கான ஓட்டம், இந்தியா மட்டுமின்றி, பரந்து பட்ட உலகம் முழுவதும் காணப்படுகிறது.
இதற்கு எதிராக நிறைய பெண்கள் போராடி வருகின்றனர் என ஆப்தே கூறியுள்ளார். நடிகை ராதிகா ஆப்தே தற்போது, காமெடி, திரில்லர் கலந்த வாசன் பாலா இயக்கத்தில் உருவான, மோனிகா, ஓ மை டார்லிங் என்ற படத்தில் நடித்து உள்ளார். நெட்பிளிக்சில் நேற்று வெளிவந்து ஓடி கொண்டிருக்கிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.