இளம் இயக்குநரிடம் கதை கேட்கும் ரஜினி: 2 கதைக்கு ஓகே?
5 March 2021, 8:27 pmஅண்ணாத்த படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்தில் நடிப்பதற்கு ரஜினிகாந்த் புதிய படத்தில் நடிப்பதற்கு இளம் இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
யாரும் அசைக்க முடியாத இடத்தில் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர து நடிப்பில் வெளியான தர்பார் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். முதல் முறையாக இணைந்துள்ள சிவா – ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் அண்ணாத்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
ஹைதராபாத்தில் நடந்து வந்த படப்பிடிப்பின் போது படக்குழுவினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்தும், ரஜினிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்தும், அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். வரும் 15 ஆம் தேதி மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு சென்னையிலேயே தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. அரசியலுக்கு வரப்போவதில்லை என்று ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டதில் இருந்து வெளியில் எங்கும் செல்லவில்லை.
மாறாக, தனுஷின் புதிய வீட்டு அடிக்கல் நாட்டு விழா மற்றும் இளையராஜாவின் புதிய ஸ்டூடியோவிற்கு மட்டும் வந்து சென்றுள்ளார். இந்த நிலையில், இனிமேல் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கு இளம் இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. அதோடு, 2 கதைகள் பிடித்துப் போக அதற்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
0
0