‘தாதா சாகேப் பால்கே விருதை நான் எதிர்பார்க்கல’: டெல்லி புறப்பட்டார் நடிகர் ரஜினி..!!

Author: Aarthi Sivakumar
24 October 2021, 10:54 am
Quick Share

சென்னை: மத்திய அரசின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெறுவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

திரையுலகின் உயரிய விருதான மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருது தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிக்கு அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிந்திருக்கிறது.

இந்நிலையில் டெல்லியில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் கலந்துக்கொள்ள சென்னை போயஸ் தோட்டத்திலுள்ள தனது வீட்டிலிருந்து புறப்பட்டார் நடிகர் ரஜினி. இந்நிலையில் வீட்டிற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருது பெறுவது மிகுந்த மகிழ்ச்சி.

நான் விருது பெறும் இந்த நேரத்தில் இயக்குநர் கே.பாலசந்தர் இல்லையே என்பது வருத்தமாக உள்ளது. விருது கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Views: - 276

0

0