தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தற்போது 72 வயது ஆகிறது. இன்னுமும் ஸ்லிம் பிட் தோற்றத்தை வைத்து மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அடுத்து எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் கனவில் கூட சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்பவே முடியாது.
பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய ரஜினிகாந்த் அதன் பின்னர் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். ஆரம்பத்தில் பெரும்பாலும் வில்லன் ரோல்களில் நடித்து வந்த ரஜினிகாந்த் பின்னர் அதிரடி ஹீரோவாக அவதாரமெடுத்து சூப்பர் ஸ்டார், தலைவர் என ரசிகர்களால் பட்டம் சூட்டப்பட்டார். கடைசியாக மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
சூப்பர் ஸ்டார் குறித்து எந்த விஷயம் வெளியானாலும் அது வைரலாகி விடும். அந்தவகையில் தற்ப்போது ரஜினிகாந்த் குறித்து பலருக்கும் தெரியாத விஷயம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த பிரியா படத்தில் படகு சேஸிங் காட்சியில் ரஜினி நடிக்கவேணும். ஆனால் அவருக்கு நீச்சல் தெரியாததால் டூப் வைத்து காட்சி எடுத்துக்கொள்ளலாம் என கூறினார்களாம். ஆனால், ரஜினி வேண்டாம் நானே நடிக்கிறேன் என கூறி அடுத்த ஒரு மணி நேரத்தில் நீச்சல் கற்றுக்கொண்டு அதிவேகமாக படகு ஓட்டி ஒட்டுமொத்த படக்குழுவினரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினாராம்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.