ரஜினிகாந்துடன் நடனமாடப்போகும் மாஸ் நடிகர்? சர்ப்ரைஸ் வீடியோவை வெளியிட்ட கூலி படக்குழு!

Author: Prasad
24 June 2025, 6:34 pm

ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இத்திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், சௌபின், நாகர்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வரும் நிலையில் சன் பிக்சர்ஸ் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறது. 

rajinikanth coolie chikitu song surprise video released

Chikitu பாடல்

இதனிடையே “கூலி” திரைப்படத்தில் இடம்பெற்ற “Chikitu” பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இப்பாடலில் டி ராஜேந்தரின் குரல் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் இப்பாடலில் டி ராஜேந்தர் ரஜினிகாந்துடன் இணைந்து நடனமாடியுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது டி ராஜேந்தர் இடம்பெற்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு. இதில் டி ராஜேந்தரின் பின்புறம் மட்டுமே காட்டப்படுகிறது. இந்த வீடியோவை சர்ப்ரைஸ் வீடியோவாக வெளியிட்டுள்ளனர். 

  • Ajith kumar cat viral videoஎன் கூட சென்னைக்கு வர்ரியா? பூனையை மடியில் வைத்து கியூட்டாக கொஞ்சிய அஜித்- வைரல் வீடியோ