ரஜினி மகளுடன் வொர்க்கவுட் செய்யும் அந்த நடிகையின் முன்னாள் காதலர் : அட, ஏடாகூடமான ஆளாச்சேப்பா.. வைரலாகும் வீடியோ..!

Author: Babu Lakshmanan
8 February 2023, 10:15 am
Quick Share

கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். திடீரென இருவரும் தங்களுடைய விவாகரத்தை அறிவித்ததால், அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

Dhanush Aishwarya - Updatenews360

இருகுடும்பத்தினரும், குறிப்பாக ரஜினிகாந்த் இருவரையும் சமாதானப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இருவரும் தங்களின் முடிவில் இருந்து பின்வாங்கியது போல தெரியவில்லை.

தனுஷை போலவே ஐஸ்வர்யாவும், திரைப்படங்களில் மொத்த கவனத்தையும் செலுத்தி வருகிறார். இவர் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

சமூகவலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது ஜிம் வொர்க்கவுட் வீடியோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில், அண்மையில், நடன இயக்குனரும், நடிகருமான பிரபு தேவாவுடன் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை பகிர்ந்திருந்தார்.

பிரபுதேவா பிரபல நடிகை ஒருவரை காதலித்து விட்டு கைவிட்டதை சுட்டிக்காட்டும் விதமாக, இவரு ஏடாகூடமானவர் ஆச்சே.. உஷாரா இருங்க என்பதை போல சமூகவலைதளங்களில் முனுமுனுத்து வருகின்றனர்.

Views: - 114

0

0