குடியால் சேர்ந்த நட்பு.. துரோகம் செய்த இளையராஜா ..அதிர்ச்சியில் ரஜினி

Author: Selvan
14 November 2024, 7:00 pm

ரஜினிகாந்தின் ஆரம்ப கால பயணம்

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றன.

நிறைய ஹிட் படங்களை கொடுத்து இந்திய சினிமாவின் உச்சத்தில் இருந்த ரஜினிகாந்த் அரசியலுக்கு வர போகிறேன் என்ற தகவலை வெளியிட்டார்.பின்பு அரசியலை கைவிட்டு ஆன்மிகத்தை கையில் எடுத்து தன்னுடைய வழக்கமான சினிமா வேலையை தொடர்ந்தார்.

rajinikanth bad habit

ஆரம்பத்தில் ரஜினி சிகரெட்,மது என ஏகப்பட்ட கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகி இருந்தார்.சில சமயம் ஷூட்டிங் நடக்குற இடத்துக்கே குடித்து விட்டு தான் வருவார் என்ற தகவலும் சொல்லப்பட்டது.இதனால் இயக்குனர் பாலச்சந்திருக்கும் இவருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இளையராஜாவுடன் கூட்டணி

தன்னுடைய பழைய பேட்டி ஒன்றில் தனக்கு இருந்த குடிப்பழக்கத்தை பற்றியும் இளையராஜாவோடு இருந்த நட்பை பற்றியும் பேசி இருப்பார்.இளையராஜாக்கு ஆரம்பத்தில் குடிப்பழக்கம் இருந்த போது நானும் அவரும் ஒண்ணா சேர்ந்து பல நாட்கள் குடித்திருக்கோம்.

illayaraja stop drinking habit

ஒரு நாள் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு சுத்தமாகி ஒரு ஆன்மீகவாதியாக மாறி என் முன்னால் வந்து நின்றார்.அதை பார்த்ததும் எனக்கு ஷாக்காகி விட்டது.அவருடைய அந்த ஆன்மீக தோற்றத்தை பார்த்ததிலிருந்து இளையராஜாவை சாமி என அழைக்க தொடங்கி விட்டேன் என அந்த பேட்டியில் ரஜினி கூறியிருப்பார் .

  • Sathyaraj Daughter Divya Sathyaraj என் வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனையான காலம் இது.. பிரபல நடிகரின் மகள் வேதனை!
  • Views: - 192

    0

    0