‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை ரம்பா. இதன்பின் ‘செங்கோட்டை, அருணாச்சலம், காதலா காதலா, மின்சார கண்ணா, ஆனந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்தார்.
நடிகை ரம்பாவிற்கு கடந்த 2010ஆம் ஆண்டு இந்திர குமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார். இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இதனிடையே அடிக்கடி தனது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். நடிகை ரம்பா திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய நிலையில் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறாராம்.
மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ள ரம்பா சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், அதில் ரஜினியுடன் அருணாச்சலம் படத்தில் நடித்ததை பற்றி சந்தோஷமாக பகிர்ந்து உள்ளார். அப்போது, சல்மான்கான் ஒரு நாள் செட்டுக்கு வந்த போது ரம்பா கட்டிப்பிடித்து வரவேற்றுள்ளார்.
இதை பார்த்த ரஜினி ரம்பாவை வம்பு இழுக்க வேண்டும் என்று கோபமாக என்ன ஹிந்தி ஹீரோ என்றால் கட்டிபிடித்துதான் வரவேற்பீர்கள். ஆனால், தென்னிந்திய நடிகர்கள் என்றால் சும்மாவா ஒரு குட் மார்னிங் மட்டும் சொல்லிட்டு ஓரமா போய் உட்கார்ந்து விடுகிறீர்கள் என கோபமாக இருப்பது போல் ரஜினி நடித்து ரம்பாவை வம்பு இழுத்ததாக ரம்பா தெரிவித்துள்ளார்.
மேலும், அருணாச்சலம் படத்தின் ஷூட்டிங் இல் கலந்து கொண்ட போது லைட் ஆப் ஆனதும், தன் முதுகில் யாரோ தட்டி விட்டார்கள், நான் பயத்துடன் கத்தி விட்டேன். அதன்பிறகு, தான் அது ரஜினிகாந்த் என்று தெரியவந்தது என ரம்பா பேட்டியில் கூறியிருந்தார். இந்த பேட்டியை பார்த்த நெட்டிசன்கள், ரம்பாவிடம் அத்துமீறிய ரஜினி என்ற ஹேஷ்டேக்கை இணையத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.