“நீங்க இல்லாம நான் இல்ல” டிவிட்டரில் உருகிய ரஜினி…! ஆனந்த கண்ணீரில் ரஜினி ரசிகர்கள்…!

9 August 2020, 10:03 pm
Quick Share

என்னடா இது…? நம்ம தலைவர் பிறந்தநாள்தான் டிசம்பர் 12ஆம் தேதி ஆச்சே இன்னிக்கு என்ன ரஜினி ரசிகர்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் ? என்று கேட்போருக்கு , இன்று நடிகர் ரஜினி திரைத்துறையில் காலடி எடுத்து வைத்து 45 வருடங்கள் ஆகிவிட்டது. .
தமிழ் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகையும் திரும்பி பார்க்கவைத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ABC என எல்லா சென்டர்களையும் அடித்து நொறுக்கி விட்டார். இவர் 45 வருடங்களாக தமிழ் சினிமாவில் தான் மட்டும்தான் சூப்பர் ஸ்டார் என்றும், பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றும் ரஜினி நிரூபித்துகொண்டே இருக்கிறார்,

இனிமேலும் அந்த நிலைமை மாறப்போவதில்லை.ரசிகர்களை தன்னுடைய ஸ்டைலாலும், நடிப்பாலும் இன்று கட்டிவைத்துள்ளார். அப்பேற்பட்ட ரசிகர்கள் ரஜினிகாந்தின் திரை உலகப் பயணத்தை திருவிழா போல் வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். இதனால் மனம் நெகிழ்ந்த ரஜினி, அவருடைய பிஸியான நேரத்தில் ரசிகர்களுக்கு நன்றி கூற ட்விட்டரில் ஒரு பதிவு செய்திருக்கிறார்.

“என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி.

நீங்கள்இல்லாமல்நான்_ இல்லை”

என்று மனம் நெகிழ்ந்து இவர் பதிவு போட, ஆனந்த கண்ணீரில் மிதக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

Views: - 11

0

0