படுதோல்வி சந்திக்க போகுதா “ஜெயிலர்”…? தலைவருக்கு தலைவலி கொடுக்கும் நெல்சன்!

தமிழ் சினிமாவில் என்னதான் பெரிய ஹீரோக்கள் வச்சி படம் எடுத்தாலும் அது தோல்வி அடைந்துவிட்டால் யாரும் இயக்குனரை பெரிதாக மதிக்கமாட்டார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் அண்மையில் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருக்கு நடந்தது. இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆன நெல்சன் கோலமாவு கோகிலா படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார் அந்த படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவின் பார்வை அவர் மீது விழுந்தது. இதையடுத்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கி பிளாக் பஸ்டர் கொடுத்தார்.

அதன் பின்னர் விஜய்யை வைத்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் பீஸ்ட் படத்தை இயக்கி பெரும் தோல்வியை கொடுத்தார். அதன் பின்னர் தற்போது ரஜினிகாந்த் வைத்து ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார். இப்படி ஒரு நிலையில் அண்மையில் தற்போது தனியார் ஊடகம் வழங்கிய விருது விழாவிற்கு சென்ற நெல்சன் மரியாதையோடு வரவேற்பு கொடுக்கப்படாமல் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்.

அதே நிகழ்ச்சிக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வரும் போது பவுன்சர்கள் சூழ அணிவகுத்து வரவேற்கப்பட்டார். ஆனால் நெல்சன் மற்றும் கிங்ஸ்லி வரும் போது அங்கு யாரும் அவர்களை கண்டுகொள்ளவிலை. இதனால் மிகவும் அசிங்கப்பட்டு தலைகுனிந்தபடி சென்றுள்ள வீடியோவை ரசிகர்கள் ஷேர் செய்து “ஜெயிலர் படம் வெளியாகட்டும்” பாடம் புகட்டுவோம் என அவருக்கு ஆதரவு குரல் கொடுத்தனர்.

இந்த சம்பவம் ரஜினி காதுக்கு செல்ல… ஜெயிலர் படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் நடைபெறும் இடத்திற்கு முன்னறிவிப்பு இல்லாமல் திடீர் விசிட் அடித்திருக்கிறார். அப்போது நெல்சனை அருகில் அமரவைத்து. விருது விழாவில் நடந்த சம்பவத்தை குறித்து கேள்விப்பட்டேன். அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டாம். நானும் இப்படி நிறைய அவமானப்படுத்தப்பட்டிருக்கிறேன் என கூறி அவரது அனுபவங்களை எடுத்து சொல்லி நெல்சனை பூஸ்ட் செய்திருக்கிறார். பின்னர் ஒட்டுமொத்த படக்குழுவையே உற்சாகப்படுத்திவிட்டு சென்றதாக பிரபல பத்திரிக்கையாளர் செய்யார் பாலு தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் மீண்டும் சமீபத்திய பேட்டி ஒன்றில் செய்யார் பாலுவிடம் தொகுப்பாளர், நெல்சன் மீண்டும் தோல்வியை தான் கொடுக்கப்போகிறார் என வெளிச்சமாக தெரிகிறது. ஏனெனென்றால் விஜய் நடித்த பீஸ்ட் படம் முழுக்க விஜய் ஒரே ஒரு ஆடையை அணிந்து நடித்தார். ஒரே நாளில் நடக்கும் கதையை கொடுத்தது தான் பீஸ்ட் தோல்விக்கு காரணமாக இருந்தது.

அதை அடுத்த படமான ஜெயிலரில் திருத்திக்கொள்ளாத நெல்சன் இந்த படத்திலும் ரஜினிக்கு ஒரே ஆடை கொடுத்து படம் முழுக்க ஒரு நாள் கதை போன்று சமீபத்தி வெளியான பர்ஸ்ட் லுக், ரிலீஸ் டேட் அறிவிப்பில் தெரிந்தது. இதனால் இந்த படமும் தோல்வி அடையும் என தெரிந்தே ரஜினி பாதாளத்தில் விழுந்துள்ளார் என கூறியுள்ளார். இது ரஜினி ரசிகர்ளுக்கு அதிருப்தியை கொடுத்துள்ளது.

Ramya Shree

Recent Posts

மக்களை ஏமாற்ற ரோடு ஷோ நடத்துகிறார்.. முதலமைச்சருக்கு எதுவும் தெரியல : அன்புமணி குற்றச்சாட்டு!

வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…

21 minutes ago

எனக்கும் அந்த மாதிரி ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க- நெட்டிசன்களின் வலையில் சிக்கிய அதிதி பாலன்…

மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…

52 minutes ago

கடனை திருப்பி தராததால் மரத்தில் பெண்ணை கட்டி வைத்து தாக்கிய விவகாரம்.. போலீசார் செக்..!!

சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…

2 hours ago

படத்தை தடை செய்தது நியாயமா? தக் லைஃப்க்கு ஆதரவாக வந்த உச்சநீதிமன்ற உத்தரவு!

மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…

3 hours ago

நெல்சன் சார், நீங்க என்ன இங்க? இணையத்தில் லீக் ஆன வெற்றிமாறன்- சிம்பு படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்!

வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…

4 hours ago

சமந்தாவிடம் வம்பிழுத்த நபர்கள்.. கோபத்தோடு பேசிய சமந்தாவின் ஷாக் வீடியோ!

நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…

4 hours ago

This website uses cookies.