கிராம பாங்கான கதாபாத்திரங்களுக்கு பக்காவாக பொருந்துபவர் நடிகர் ராஜ் கிரண் இவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் பிறந்து தமிழ் சினிமாவின் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு சிறந்து விளங்கி வருகிறார். மிகவும் எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த இவர் குறிப்பாக கிராமத்து ரசிகர்களை குறிவைத்து நடித்து அவர்களின் தீவிர ரசிகர் ஆனார்.
தமிழில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் சில திரைப்படங்களை தயாரித்தும் இயக்கியும் உள்ளார். தான் மட்டும் வளர்ந்தால் போதும் என்ற எண்ணம் கொண்ட நடிகர்களுக்கு மாறான ராஜ்கிரண் நிறைய புதுமுக நடிகர்களை அறிமுகம் செய்துள்ளாார். தமிழ் சினிமாவின் தற்போது உச்ச காமெடி நடிகரான வடிவேலுவை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்து அவருக்கு வாழ்க்கை கொடுத்தவர் ராஜ்கிரண். கிட்டதட்ட 70 வயதை நெருங்கும் ராஜ்கிரண் இன்னும் படங்களில் நடித்து வருகிறார். தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி திரைப்படத்தில் வயதான முதியவர் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இந்நிலையில், ராஜ்கிரணை எதிர்த்து திருமணம் செய்துக்கொண்ட அவரின் வளர்ப்பு மகள் காதல் கணவரை பிரிந்துள்ளார். பின்னர் நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் என்னை மன்னித்துவிடுங்கள் Daddy என வீடியோ வெளியிட்டு கதறி இருந்தார்.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் திருமணம் ஆன முதல் மாதத்தில் இருந்து கணவருக்கும் தனக்கும் பிரச்சனை தொடங்கிவிட்டது என்றும், குடித்துவிட்டு கண்டபடி அடிப்பார். மோசமாக பேசுவார் காலையில், எழுந்தவுடன் இரவு என்ன நடந்தது என்று தெரியாது போல தெளிவாகவே இருப்பார்.
ஆரம்பத்தில், இவருடைய இந்த குடிப்பழக்கத்தை மாற்றிவிடலாம் என்று நான் நம்பினேன். ஆனால், அது என்னால் முடியவில்லை. அதுமட்டுமின்றி, காசு கேட்டு அடிக்கடி டார்ச்சர் செய்வார். பிரிந்து செல்லலாம் என நினைத்தால் எனது மொத்த குடும்பத்தையும் அசிங்கப்படுத்துவேன் என மிரட்டல் விடுத்தும் வந்தார். இந்த சூழ்நிலையிலும், என் அப்பா தான் என்னை பார்த்துக் கொண்டார் என ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியா தெரிவித்துள்ளார்.
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
This website uses cookies.