90ஸ் ரசிகர்களின் பேவரைட் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவரான இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி , போஜ்புரி உள்ளிட்ட பல மொழி படங்களில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்துக்கொண்டிருந்தார்.
தமிழில் அவர் நடித்த முதல் படம் கதிர் இயக்கத்தில் 1993ஆம் ஆண்டு வெளியான உழவன் ஆகும். அவருடைய இரண்டாவது படமான உள்ளத்தை அள்ளித்தா வெற்றி பெற்று அவருக்குப் பெரும் புகழை அள்ளித் தந்தது. அருணாச்சலம் படத்தில் ரம்பாவின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. படங்களில் கவர்ச்சியாக வலம் வந்த ரம்பாவை ரசிகர்கள் அவரை தொடை அழகி என்று அழைத்தனர்.
ரம்பா கலைஞர் தொலைக்காட்சியின் வெற்றி நிகழ்ச்சியான மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவராக பங்குபெற்று புகழ் பெற்றார். தொடர்ந்து 90ஸ் மற்றும் 20ஸ் ஆரம்பத்தில் தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களில் நடித்து வந்தார். பின்னர் இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில், ரம்பா புது வீடு கட்டி குடிபெயர்ந்துள்ளார். அதன் கிரகப்பிரவேசம் பூஜையின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.
இந்நிலையில், ரம்பாவின் கணவர் அவரைப் பிரிந்து நடிகை தமன்னாவுடன் நெருக்கம் காட்டுவதாக கோலிவுட்டில் பரபரப்பாக முணுமுணுக்க படுகிறது. தமன்னாவை அவர் திருமணம் செய்யப் போகிறார் என்றும் கூறப்படுகிறது. என் கணவர் என்னை இன்ஸ்டாவில் பின்தொடரவில்லை தமன்னாவை தான் பாலோ செய்கிறார் என்று ரம்பா முன்னதாக பேட்டி ஒன்றில் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சமீபத்தில் ரம்பாவின் கணவர் தொடங்கிய மேஜிக் ஹோம் ஷோரூமை தமன்னா தான் தொடங்கி வைத்தார். அப்போது இவர்கள் இருவருக்குள்ளும் நெருக்கமாகிவிட்டார்களாம். மேலும், பிப்ரவரி 9-ம் தேதி இலங்கையில் நடக்கும் கச்சேரி ஒன்றில், ஹரிஹரன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். அந்த விழாவிற்கும் ரம்பா வரும் நிலையில், தமன்னாவும் அங்கு கலந்து கொள்ள இருப்பதால் நடிகை ரம்பா கோபத்தில் உள்ளாராம். இதனிடையே, ரம்பா தன் கணவர் விவகாரம் குறித்து தமன்னாவிடம் பேசுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.