தமிழ் சினிமாவில் 80 90களில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ரம்யா கிருஷ்ணனும் ஒருவர். இவர் தன்னுடைய 14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி முதல் படமே இவருக்கு பெரும் தோல்வி படமாக அமைந்தது. அதன் பிறகு ரம்யா கிருஷ்ணன் முதல் வசந்தம் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.
மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது. இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். அதன்பின் பல படங்களில் நடித்து வந்தாலும் ரம்யா கிருஷ்ணனுக்கு போதிய அங்கீகாரமும் அடையாளமும் கிடைக்கவில்லை என்று சொல்லலாம். இவர் பல ஆண்டுகள் கழித்து படையப்பாவின் நீலாம்பரியாக நடித்தது மிகப் பெரிய அளவில் இவருக்கு கை கொடுத்தது.
அதன் பிறகு பாகுபலி படத்தில் சிவகாமி தேவி மேலும் இவருக்கு அதிகப்படியான வரவேற்பு கொடுத்தது. இவரை அனைவரும் ராஜமாதாவாகவே கருதினர். இவரை தவிர யாராலும் அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு இவரது நடிப்பு அருமையாக இருந்தது. தற்போது ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரம்யா கிருஷ்ணன் தன்னுடைய வயதில் அந்த நடிகர்கருக்கு மகள்கள் இருக்கிறார்கள். இருந்தாலும், அந்த நடிகருடன் ரொமான்ஸ் காட்சிகளில் வேறு வழியில்லாமல் நடித்தேன். ஆரம்பத்தில், எனக்கு இது நெருடலாக இருந்தது. ஆனால், திரைப்படமாக பார்க்கும்போது இந்த விஷயங்கள் எல்லாம் பெரிதாக தெரியவில்லை. சினிமாவில் ஜோடி போட்டு நடிப்பதற்கு வயசு வித்தியாசம் எல்லாம் ஒரு தடையே, இல்லை என ரம்யா கிருஷ்ணன் வெளிப்படையாக பேசியுள்ளார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.