காட்டிய கவர்ச்சிக்கு ரம்யா பாண்டியனுக்கு அடித்தது ஜாக்பாட் : சூப்பர் ஸ்டாருக்கே ஜோடி போடும் வாய்ப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
6 December 2021, 1:31 pm
Ramya Pandian - Updatenews360
Quick Share

சினிமாவில் உச்ச நடிகருடன் நடிக்கும் வாய்ப்பு நடிகைகளுக்கு கிடைப்பது சுலபமான காரியமல்ல. ஆனால் அது ரம்யா பாண்டியனுக்கு கிடைச்சிருக்கு.

என்னதான் சினிமாவில் நடிகைகள் எவ்வளவு மூடி நடித்தாலும், இறுதியில் கவர்ச்சி இல்லாமல் நிலைத்து நிற்க முடியாது. அதுதான் இன்றைய நிலை. அதை புரிந்து கொண்டு கவர்ச்சியில் களமிறங்கிய நடிகைகளில் நடிகை ரம்யா பாண்டியனும் ஒருவர்.

ஆரம்பத்தில் 2016-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி நடித்துள்ளார். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றுள்ளது. மொட்டை மாடியில் எடுத்த ஒரு Photoshoot மூலமாக தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார்.

இவரது Hot Photos பார்த்து பல இயக்குனர்கள் இவரின் மேல் கண் வைத்து இருந்தார்கள். ஆனாலும் ஏன் வாய்ப்புகள் தட்டி போகிறது என்று தெரியவில்லை.

இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதால் பெரும் வாய்ப்பு என கருதிய ரம்யாவுக்கு, நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் சினிமா அவரை கைவிடவில்லை. தொடர்ந்து கிளாமர் போட்டேக்களை போட்டு ரசிகர்களை தன் பக்கத்தில் கட்டி வைத்திருந்தார்.

சூர்யா தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்த ராமே ஆண்டாலும் ராவணண் ஆண்டாலும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்த நிலையில் யாருமே எதிர்பாராத வகையில் மலையாள சினிமாவின் மெகா ஸ்டார் மம்முட்டியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதை அவரே தனது சமூக வலைதளப் பக்கங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Views: - 301

2

1