இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் வாரிசு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் , தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமானது.
ஆம், இவர்கள் இவரும் சேர்ந்து 2018ம் ஆண்டில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் இந்திய சினிமா அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து ராஷ்மிகாவிற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிய துவங்கியது. தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து இந்தி திரைப்படத்திலும் கவனத்தை செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாச வீடியோவாக வெளிவந்து பேரதிர்ச்சி கொடுத்தது. இச்சம்பவம் சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் இது குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ள நடிகை ரஷ்மிக்கா, இது போன்ற மோசமான தொழில்நுட்ப செயல்கள் மனதிற்கு பயத்தை கொடுக்கிறது. இதே சம்பவம் நான் பள்ளியில் படிக்கும்போதோ? அல்லது கல்லூரியில் படிக்கும்போதோ நடந்திருந்தால்? நான் இதை எப்படி எதிர்க்கொண்டிருப்பேன் என யூகித்து கூட பார்க்க முடியவில்லை. இது போன்ற கீழ்த்தரமான செயல்களினால் நம்மில் பலர் பாதிக்கப்படுவதற்கு முன்னர் இதை அறவே தடுத்து நிறுத்தவேண்டும் என தனது ஆதங்கத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.
கிரிக்கெட் ஜாம்பவனாக வலம் வருவபர் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் ஒரு…
நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்று புகழப்படுகிறார். அவருக்கு ஓய்வே இல்லை என்பது…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த வாரம் மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான “ரெட்ரோ”…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை மக்கள் மத்தியில் கவர வைத்த பங்கு கோபிநாத், பிரியங்கா, மாகாபாவுக்கு உண்டு. நிகழ்ச்சியை கொண்டு…
இந்தியர்களை அதிரவைத்த சம்பவம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இன்னும் பல…
This website uses cookies.