கவர்ச்சின்னா ஓ.கே… ஆனா அதுக்கு இப்படியா கேட்கனும்.. அலம்பல் பண்ணும் ராஷ்மிகா..!

Author: Rajesh
8 February 2022, 4:01 pm
Quick Share

நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் படங்களுக்கான வரவேற்பு இளைஞர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் அவர் தன் சம்பளத்தை நாளுக்கு நாள் உயர்த்தி வருவதால் பல தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதனிடையே ராஷ்மிகா மந்தனா பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்க ஆரம்பித்தலிருந்து தன் சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி வருகிறார்.


சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனால் ராஷ்மிகா மந்தனாவின் சினிமா மார்க்கெட் தென்னிந்திய சினிமா நடிகை என்பதிலிருந்து, இந்திய அளவில் முன்னணி நடிகை என்ற அளவிற்கு உயர்ந்துள்ளார்.

இந்த நிலையில், அவர் தன் தற்போது தனது சம்பளத்தை 5 கோடி ரூபாயாக உயர்த்தி உள்ளார். ராம் சரண் நடிக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க படக்குழுவினர் ராஷ்மிகா மந்தனா கேட்டதாகவும், வெறும் 30 நிமிடம் ராம் சரணிடம் இன்டர்வியூ எடுக்குற சீனில் நடிப்பதற்கு, ராஷ்மிகா மந்தனா 1 கோடி சம்பளம் கேட்டதாக தகவல்; வெளியாகியுள்ளது. இதனையடுத்து அடுத்து, 30 நிமிடம் வரும் காட்சியில் நடிப்பதற்கு இவ்வளவு சம்பளமா என தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனிடையே பல திரைப்படங்களில், ஐட்டம் டான்ஸ், கவர்ச்சியான காட்சிகளில் நடிககைகள் நடிப்பதற்கு ரூபாய் 1 கோடி வரை தயாரிப்பாளர்கள் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் படத்தில் சாதாரணமாக நடிக்கக்கூடிய இந்த காட்சியில் இவ்வளவு சம்பளம் கேட்பது அநியாயம் என படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 908

2

0