ரவி மோகன் வாங்கிய ரூ.10 கோடி வீடு.. மாலத்தீவில் மஜா.. காட்டிக் கொடுத்த போட்டோஸ்!
Author: Udayachandran RadhaKrishnan15 May 2025, 11:58 am
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தது முதல் அவர் மீது ஏராளமான விமர்சனங்கள் வருகிறது, இரு மகன்களுடன் தாய் வீட்டில் ஆர்த்தி வசித்து வருகிறார்.
இதையும் படியுங்க: டிடி நெக்ஸ்ட் லெவல் படக்குழுவினர் திருப்பதி வந்தால் கால்களை உடைப்போம்.. தேவஸ்தான குழு அதிகாரி ஆவேசம்!
இதனிடையே பாடகி கெனிஷாவுடன் ரவிக்கு காதல் என கிசுகிசுக்கப்பட்டது. இதை உறுதி செய்யும் விதமாக இருவரும் பொதுவெளியில் வலம் வந்ததை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர்.
ஆனால் இது நட்பு தான், என இருவரும் மாறி மாறி அறிவிதது வருகின்றனர். இதனிடையே ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் இருவரும் கைக்கோர்த்து வந்தது சர்ச்சையாக வெடித்தது.

இதனால் கடுப்பான ஆர்த்தி, கடும் கோபத்தை தனது இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியிட்டிருந்தார். ஆர்த்திக்கு ஆதரவாக சினிமா பிரபலங்கள் வரிசை கட்டி வருகின்றனர்.

இதையடுத்து கெனிஷாவோ தன் மீது வதந்திகளை கிளப்ப வேண்டாம், ரவி மோகன் எமோஷனலாக பாதிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார்.
இப்படி இருபுறமும் மோதல் வெடிக்க, ரவி மோகன் மும்பையில் ரூ.10 கோடி மதிப்பில் தனது காதலிக்காக புதிய வீடு கட்டியுள்ளதாகவும், தற்போது ரவி மாலத்தீவில் ஜாலியாக ஊர் சுற்றி வருவதாக பிரபல பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளது மேலும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.