80ஸ் எவர்கீரீன் நடிகைகள் என்றவுடன் அதில் கண்டிப்பாக அம்பிகா பெயர் இருக்கும். ரஜினி, கமல், சத்யராஜ் என தமிழிலில் மட்டுமில்லை தெலுங்கு, மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பெரியதிரையில் கொடிகட்டி பறந்த அம்பிகா கடைசியாக அவன் இவன் படத்தில் நடித்து மிரட்டியிருப்பார். தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.
இதனிடையே, ஒரு சில காலகட்டத்தில் அம்பிகா வாய்ப்பில்லாமல் இரண்டாவது நாயகியாக நடிக்க ஆரம்பித்தார். அதன் பின்னர் 1988 ல் பிரேம் குமார் மோகனை திருமணம் செய்து 8 ஆண்டுகள் கழித்து கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். அதன்பின்னர், 6 ஆண்டுகளுக்கு பின்னர் 2000 ஆம் ஆண்டு ரவிகாந்த் என்பவரை திருமணம் செய்து இரண்டு ஆண்டுகளில் அவரையும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார் என்று கூறப்பட்டு வந்தது. தற்போது தன் பிள்ளைகளுடன் தனியாக வசித்து வரும் அம்பிகா சீரியல்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், என்னை அம்பிகாவின் கணவர் என்று கூறி வருகின்றனர் என்று நடிகர் ரவிகாந்த் முதன்முதலாக ஒரு தகவலை கூறி பல வருட வதந்திகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது, சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் என்னைப் பற்றி பல வதந்திகள் வெளியாகிறது. இதனால், மக்கள் உங்களுக்கு என்ன வரப்போகிறது நான் ஒரு உண்மையை கூறுகிறேன். என்னை அம்பிகாவின் கணவர் என்று செய்திகள் வெளியானது. நானும், அம்பிகாவும் நாலு மொழிகளில் கிட்டத்தட்ட 16 படங்களில் கணவன் மனைவியாக நடித்து இருக்கிறோம்.
எங்களுடைய வீடு பக்கத்து பக்கத்து வீடு அதுக்கு எதுக்கு ரெண்டு வண்டியில போகணும் என்று ஒரே வண்டியில் போவோம். செட்டுக்கு ஒன்றாக போனதும் செட்டில் புருஷனும் பொண்டாட்டியும் வந்துட்டாங்க ஷாட்டுக்கு போலாம்னு சொல்லுவாங்க இதை பார்க்கிறவர்கள் என்ன நினைப்பார்கள் அதுதான் நடக்கிறது. அந்த பொண்ணு பாவம் அமெரிக்காவில் பிரேம்குமார் மோகன் என்பவரை திருமணம் செய்து ராம்குமார் ரிஷி குமார் என்ற மகன்களை பெற்று நிம்மதியாக அங்க இருக்காங்க, சீன் வரும் போது இங்கு வந்து நடிச்சிட்டு போவாங்க, இதுதான் உண்மை தயவு செய்து சோசியல் மீடியாவில் வரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று ரவிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.