“என் Life-லயே இப்படி நடந்ததில்ல..” புது மனைவியால் புலம்பும் ரவீந்தர்..!

Author: Vignesh
5 November 2022, 5:30 pm
mahalakshmi - updatenews360
Quick Share

சமீபத்தில் திருமணம் முடிந்த மகாலட்சுமி தன்னுடைய கணவர் சமூக வலைத்தளத்தில் செய்து செயலை நினைத்து நொந்து போய் கருத்து ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இரண்டு மாதங்களுக்குள் மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இடையே இப்படி ஒரு பிரச்சனை வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

ரசிகர்கள் வியந்து போன திருமணம்

Mahalakshmi-3-Updatenews360

சின்னத்திரை பிரபலமான மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்றாலும் சமூக வலைத்தளத்தில் இவர்களுடைய திருமணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எந்த பக்கம் திருப்பினாலும் இவர்களுடைய புகைப்படம் தான் வந்து கொண்டிருந்தது .90ஸ் கிட்ஸ்களின் பலருடைய மோட்டிவேஷன் ஆகவும் ஆறுதலாகவும் ரவீந்திரருடைய திருமணம் இருந்து வந்ததாக பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

மோட்டிவேஷன் ஆன திருமணம் பலர் வயதாகி விட்டதே நமக்கு திருமணமாகவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தாலும் ரவீந்தர்க்கு மகாலட்சுமி கிடைத்தது போல தங்களுக்கும் ஒருநாள் திருமணம் முடியும் என்று இவர்களுடைய திருமண புகைப்படங்கள் மீம்ஸ்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.

Mahalakshmi-1-Updatenews360-1

மகாலட்சுமிக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் இவருடைய திடீர் திருமணம் பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் இவர்களுக்கு வாழ்த்துக்கள் மட்டும் குறைந்தபாடில்லை. சமூக வலைத்தளத்தில் இவர்களுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக பல சேனல்கள் இவர்களை வலம் வந்தது.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவருமே தாங்கள் அடிக்கடி திருமணத்திற்கு பிறகு செல்லும் இடங்களில் எல்லாம் புகைப்படங்களை எடுத்து தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களை மேலும் வெறுப்பேற்றி வந்தனர் ரசிகர்கள். பலர் இவர்களுடைய திருமண வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்று கூறி வந்தாலும், ஒரு சிலர் வயிறு எரிச்சலில் இவர்களை பற்றி நெகட்டிவ் கருத்துக்களையும் வெளியிட்டு வந்தனர் . தற்போது அவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் வகையில் ரவீந்திர் வெளியிட்ட பதிவு இருந்து வருகிறது.

mahalakshmi - updatenews360

ரவீந்தர் வெளியிட்ட பதிவு

பின்னர் அவ்வப்போது தாங்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களையும் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி ஆகியோர், சோஷியல் மீடியாவில் பகிர்ந்தும் வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் ரவீந்தர் பகிர்ந்தார். மேலும், “ஒரு மாத Anniversary. எங்களை பார்த்து சிரிக்க மக்களுக்கு 100 காரணங்கள் இருக்கும். ஆனால், எனது சந்தோசத்திற்கு ஒரே ஒரு காரணம் தான். அது நீ. லவ் யூ “முயலு” என ரவீந்தர் குறிப்பிட்டிருந்தார்.

mahalakshmi - updatenews360

இதில், கமெண்ட் செய்த மகாலட்சுமி, “ஹாப்பி Anniversary அம்மு. எனது மகிழ்ச்சிக்கு காரணம் நீங்கள் தான். லவ் யூ டூ மேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில்தான் ரவீந்தர் தனது மனைவி மகாலட்சுமி சமையல் குறித்த க்யூட்டான புகைப்பட பதிவை பகிர்ந்துள்ளார். அதில் வேகவைத்த முட்டை கருகியிருப்பதை குறிப்பிட்டு பதிவிட்டுள்ள தயாரிப்பாளர் ரவீந்தர், “என் வாழ்க்கையிலேயே முட்டை இந்த நிலைக்கு கருகி போனதை நான் பார்த்ததில்லை. மகலாட்சுமி நிச்சயமாக என் எடை குறைய வைத்துவிடுவார். புது வாழ்க்கை. புதுமனைவி.. சூப்பர் சமையல்” என ஜாலியாக குறிப்பிட்டுள்ளார்.

Views: - 218

1

0