‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் ரெடின் கிங்ஸ். ‘டாக்டர்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். வசன உச்சரிப்பு வித்தியாசமான உடல் மொழி என தனது நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்த ரெடின் கிங்ஸ்லி விஜய் நடிப்பில் உருவாகிய ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
மேலும் சமீபத்தில் வந்த ஜெய்லர் படத்திலும் நடித்திருப்பார். இவர் படங்களில் காமெடியனாக நடித்தாலும், இவர் நிஜத்தில் ஒரு கோடீஸ்வரர் .
இவரைப் பற்றி பயில்வான் ரங்கநாதரன் ஒரு பேட்டியில் பேசுகையில், அதில், ரெடின் கிங்ஸ்லியை அனைவரும் ஒரு காமெடி பீஸ் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அவர் பெரிய மூளைக்காரன். இவர் தமிழ்நாடு முழுக்க கண்காட்சி நடத்தும் தொழில் செய்து வருவதாகவும், அதன் மூலம் அவர் அதிக அளவு சம்பாதித்து வருவதாகவும், தெரிவித்திருக்கிறார்.
இவரிடம் 300க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கிறார்கள்.மேலும், பல தொழிலதிபர்களிடம் இல்லாத விலை உயர்ந்த சொகுசு காரை இவர் வைத்து இருக்கிறார் என பயில்வான் ரங்கநாதரன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மாஸ்டர் படத்தில் விஜய்யின் தோழியாக நடித்த நடிகை சங்கீதாவை இன்று இவர் திருமணம் செய்துள்ளார். இந்த விஷயத்தை நடிகர் சதீஷ் தனது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டு திருமண வாழ்த்துக்களுடன் இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும், உண்மையில் இவர்களுக்கு திருமணமாகிவிட்டது என்று பதிவிட்டு இருந்தார்.
இந்த புகைப்படம் ஷூட்டிங் செட்டில் இருந்து எடுக்கப்படவில்லை என்றும், உண்மையாக இருவரும் திருமணம் செய்து இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து,தனது நீண்ட நாள் காதலியான நடிகை சங்கீதாவை ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்துகொண்ட ரெடின் கிங்ஸ்லி. தற்போது, ஜோடி ஜாலியாக ஹனிமூன் கொண்டாட சென்றிருக்கும் போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு ட்ரெக்கிங் என்ற திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகள் தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
This website uses cookies.