தமிழ் சினிமாவில் மிகக்குறுகிய காலத்திலேயே பரவலான மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான காமெடியனாக பார்க்கப்படுபவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. இவர் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ‘டாக்டர்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். வசன உச்சரிப்பு வித்தியாசமான உடல் மொழி என தனது நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்த ரெடின் கிங்ஸ்லி விஜய் நடிப்பில் உருவாகிய ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அத்துடன், சமீபத்தில் வந்த ஜெய்லர் படத்திலும் நடித்திருப்பார். இவர் படங்களில் காமெடியனாக நடித்தாலும், இவர் நிஜத்தில் ஒரு கோடீஸ்வரர். ஆம், ரெடின் கிங்ஸ்லி பார்க்கத்தான் ஒரு காமெடி பீஸ் ஆனால், உண்மையில் அவர் பெரிய மூளைக்காரர். இவர் தமிழ்நாடு முழுக்க கண்காட்சி நடத்தும் தொழில் செய்து வருகிறார். அதன் மூலம் அவர் அதிக அளவு சம்பாதித்தும் வருகிறார்.
கடந்த இரண்டு நாட்களாக ரெடின் கிங்ஸ்லி பற்றிய செய்தி தான் கோலிவுட்டின் தலைப்பு செய்தியாக பேசப்பட்டு வருகிறது. ஆம். இவர் மாஸ்டர் படத்தில் விஜய்யின் தோழியாக நடித்த நடிகை சங்கீதாவை நேற்று முன்தினம் இவர் திருமணம் செய்துக்கொண்டார். அதன் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி தீயாய் பரவியது. 46 வயது காமெடி நடிகருக்கு இவ்வளவு அழகான மனைவியா? என பலரும் ஆச்சரியப்பட்டனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பே நடிகை சங்கீதாவும், ரெடின் கிங்ஸ்லியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாகவும், எத்தனை நாள் திருமணத்தை தள்ளிப்போடுவீர்கள் என சங்கீதா கேட்டதால்தான் ரெடின் கிங்ஸ்லி ஒப்புக்கொண்டதாகவும், இந்த திருமணம் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
அதையடுத்து இந்த புதுமண ஜோடி தங்களின் தேனிலவு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அனைவரது பார்வையும் ஈர்த்துள்ளனர். ஆம் சங்கீதா முட்டி தெரிய குட்டையான கவர்ச்சி ஆடையணிந்து கிங்ஸ்லியுடன் நெருக்கமாக இருக்கும் இந்த புகைப்படங்கள் பலரின் விமர்சனத்திற்கு உள்ளாகியது.
இந்நிலையில் கிங்ஸ்லி மனைவி சங்கீதா குறித்த ஒரு ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சங்கீதா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் என்றும் அவருக்கு அவருக்கு ஒரு மகள் இருக்கிறார் என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது. இதனிடையே, திருமணத்திற்கு பின்னர் தனது முதல் பிறந்தநாளை கொண்டாடும் ரெடின் கிங்ஸ்லிக்கு, சங்கீதா க்யூட்டாக வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
தற்போது, சங்கீதா பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுத்து கொண்ட வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.