காதல் கணவருக்கு ஆசை ஆசையாய் பிறந்தநாள் வாழ்த்து.. ரெடின் கிங்ஸ்லி மனைவியின் பதிவு..!

தமிழ் சினிமாவில் மிகக்குறுகிய காலத்திலேயே பரவலான மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான காமெடியனாக பார்க்கப்படுபவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. இவர் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ‘டாக்டர்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். வசன உச்சரிப்பு வித்தியாசமான உடல் மொழி என தனது நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்த ரெடின் கிங்ஸ்லி விஜய் நடிப்பில் உருவாகிய ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

அத்துடன், சமீபத்தில் வந்த ஜெய்லர் படத்திலும் நடித்திருப்பார். இவர் படங்களில் காமெடியனாக நடித்தாலும், இவர் நிஜத்தில் ஒரு கோடீஸ்வரர். ஆம், ரெடின் கிங்ஸ்லி பார்க்கத்தான் ஒரு காமெடி பீஸ் ஆனால், உண்மையில் அவர் பெரிய மூளைக்காரர். இவர் தமிழ்நாடு முழுக்க கண்காட்சி நடத்தும் தொழில் செய்து வருகிறார். அதன் மூலம் அவர் அதிக அளவு சம்பாதித்தும் வருகிறார்.

கடந்த இரண்டு நாட்களாக ரெடின் கிங்ஸ்லி பற்றிய செய்தி தான் கோலிவுட்டின் தலைப்பு செய்தியாக பேசப்பட்டு வருகிறது. ஆம். இவர் மாஸ்டர் படத்தில் விஜய்யின் தோழியாக நடித்த நடிகை சங்கீதாவை நேற்று முன்தினம் இவர் திருமணம் செய்துக்கொண்டார். அதன் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி தீயாய் பரவியது. 46 வயது காமெடி நடிகருக்கு இவ்வளவு அழகான மனைவியா? என பலரும் ஆச்சரியப்பட்டனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பே நடிகை சங்கீதாவும், ரெடின் கிங்ஸ்லியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாகவும், எத்தனை நாள் திருமணத்தை தள்ளிப்போடுவீர்கள் என சங்கீதா கேட்டதால்தான் ரெடின் கிங்ஸ்லி ஒப்புக்கொண்டதாகவும், இந்த திருமணம் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

அதையடுத்து இந்த புதுமண ஜோடி தங்களின் தேனிலவு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அனைவரது பார்வையும் ஈர்த்துள்ளனர். ஆம் சங்கீதா முட்டி தெரிய குட்டையான கவர்ச்சி ஆடையணிந்து கிங்ஸ்லியுடன் நெருக்கமாக இருக்கும் இந்த புகைப்படங்கள் பலரின் விமர்சனத்திற்கு உள்ளாகியது.

இந்நிலையில் கிங்ஸ்லி மனைவி சங்கீதா குறித்த ஒரு ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சங்கீதா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் என்றும் அவருக்கு அவருக்கு ஒரு மகள் இருக்கிறார் என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது. இதனிடையே, இன்று நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு பிறந்தநாளாம், அவரது மனைவி அழகிய புகைப்படங்களுடன் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அவரின் அந்த பதிவிற்கு அதிக லைக்ஸ் குவிந்து வருகிறது.

Poorni

Recent Posts

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

43 minutes ago

பார்த்தாலே தெரியுது, படம் ஃபிளாப்னு- பிரபாஸின் புது பட டீசரால் கடுப்பான ரசிகர்கள்…

பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…

3 hours ago

அதிமுக மூத்த தலைவருடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு… செல்லூர் ராஜு சொன்ன விளக்கம்!

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…

3 hours ago

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு.. டுவிஸ்ட் வைத்த பாஜக!

மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…

3 hours ago

வடசென்னை 2 டிராப்? வெளிப்படையாக போட்டுடைத்த வெற்றிமாறன்!

மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…

3 hours ago

ஜெகன்மூர்த்தி வீட்டுக்கு சென்ற பொற்கொடி ஆம்ஸ்டிராங்.. மனைவியை சந்தித்து ஆதரவு..!

காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…

4 hours ago

This website uses cookies.