முழுசா மூடி நடிச்சா யாரும் பார்க்க மாட்டாங்க… சர்ச்சைக்கு மேல் சர்ச்சை கிளப்பும் ரேகா நாயர்!

Author: Shree
3 June 2023, 12:53 pm
rekha nair
Quick Share

தமிழ் சினிமாவின் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே பரவலாக முகமறியப்பட்டவர் நடிகை ரேகா நாயர். விஜய் டிவியில் ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த இவர் தொடர்ந்து சன், கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார்.

இவர் மறைந்த பிரபல சீரியல் நடிகையான விஜே சித்ராவின் தோழி. சித்ராவின் தற்கொலை ரகசியங்களை குறித்து கூட பல யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்து பரபரப்பை கிளப்பியுள்ளார். அதன் பின்னர் இயக்குனர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் ஆபாச காட்சிகளில் அரைநிர்வாணமாக நடித்து சர்ச்சை ஏற்படுத்தினார். இதனால் அவரை பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் மோசமாக விமர்சிக்க அவரை ரேகா அடித்து துவைத்ததெல்லாம் செய்தியாக வெளியானது.

இது குறித்து பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பியதற்கு, விஷால் நடித்த கதகளி படத்தில் ” காபி கொடுத்துவிட்டு போகிற காட்சி ஒன்றில் நான் நைட்டி போட்டுக்கொண்டு என் உடலை முழுவதுமாக மறைத்து நடித்திருந்தேன். அதை பற்றி இங்கு யாரும் பேசவே இல்லை.

அதன் பின்னர் போக்கிரி ராஜா படத்தில் நான் பைத்தியக்காரியாக, போதைக்கு அடிமையானவளாக, அழகு இன்றி அசிங்கமான தோற்றத்தில் நடித்தேன் அதை பற்றியும் யாரும் பேசவில்லை. ஆனால் இரவின் நிழல் படத்தில் அவுத்து போட்டு நடிச்சதை மட்டும் ஊரே கிளம்பி வந்து பேசினாங்க. அப்போ இங்க முழுசா மூடி நடிச்சா யாரும் பார்க்கமாட்டாங்க என மக்களின் பார்வை தவறு என கூறி சர்ச்சை கிளப்பியுள்ளார்.

Views: - 333

0

1