சினிமா / TV

சந்தானம் போட்ட கண்டிஷனால் கடுப்பான சிம்பு? STR 49 படம் கைமாறியதற்கு காரணம் இதுதானா?

STR 49

“தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் ஹீரோ கதாபாத்திரத்திற்கு இணையான ஒரு காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் அறிவிப்பு வெளிவந்தது. சந்தானம் பல ஆண்டுகள் கழித்து வேறொரு ஹீரோ நடிக்கும் திரைப்படத்தில் காமெடி ரோலில் நடிப்பதாக இருந்ததால் இத்திரைப்படத்திற்கு எதிர்பார்ப்புகளும் அதிகமானது.

ஆனால் இத்திரைப்படத்தை தயாரித்த ஆகாஷ் பாஸ்கரன் டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சிக்கினார். இவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ள நிலையில் இவர் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலால் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் திரைப்படத்தின்  படப்பிடிப்பு தொடங்கப்படவே இல்லை. இதனிடையே சிம்பு தற்போது வெற்றிமாறன் இயக்கும் திரைப்படத்தில் ஒப்பந்தமாகிவுள்ளார் எனவும் வருகிற ஜூலை மாதம் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு சிம்புவின் 49 ஆவது திரைப்படம் வெற்றிமாறனிடம் கைமாறியுள்ளது.

சந்தானம் போட்ட கண்டிஷன்?

ஆனால் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாக இருந்த திரைப்படம் ட்ராப் ஆனதற்கு ஆகாஷ் பாஸ்கரன் டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சிக்கியது ஒரு காரணம் என கூறப்பட்டாலும் இத்திரைப்படம் ட்ராப் ஆனதற்கு வேறு ஒரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது சந்தானம் இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான நிலையில் சிம்புவுக்கு நிகராக தன்னுடைய கதாபாத்திரமும் இருக்க வேண்டும் என பல கண்டிஷன்கள் போட்டாராம். இது சிம்புவுக்கும் சந்தானத்திற்கும் இடையே மனஸ்தாபத்தை ஏற்படுத்தியதால்தான் இந்த பிராஜெக்ட் ட்ராப் ஆனதாக ஒரு தகவல் வெளிவருகிறது. 

Arun Prasad

Recent Posts

அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்

கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…

8 hours ago

திமுக அரசுக்கு எதிராக பேசுவதால் என் மீது வழக்கு தொடுக்க சதி நடக்கிறது : எம்எல்ஏ பரபரப்பு புகார்!

வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…

9 hours ago

வெறித்தனமான அப்டேட்! விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி?

விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…

9 hours ago

ஏதாவது ஒரு ஆக்ஷன் எடுப்பாங்க… மா விவசாயி போராட்டம் குறித்து அமைச்சரின் அலட்சிய பதில்!

வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…

10 hours ago

கூலி படத்தின் பிசினஸை அசால்டாக தட்டிவிட்டு ஓவர்டேக் செய்த ஜனநாயகன்? செம டிவிஸ்ட்டா இருக்கே!

கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…

10 hours ago

அதிமுகவை சீண்டுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள் : விஜயபாஸ்கர் ஆவேசம்!

திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…

11 hours ago

This website uses cookies.