80ஸ்-களில் நடிகை ரேவதி இளைஞர்கள் மனதில் கனவுக்கன்னியாக இடம்பிடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகை ரேவதி.
மண்வாசனை, தேவர் மகன், மௌனராகம், புதுமை பெண் என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளிவந்த நவரசா ஆந்தாலஜி சீரிஸில் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் ரேவதி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த காலத்தில் இருந்த பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து வந்த நடிகை ரேவதி. தன்னுடைய கலக்கலான திரைப்படங்களை கொடுத்து வந்த நிலையில், மலையாள இயக்குனரான சுரேஷ் சந்திர மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு, 2013 ஆம் ஆண்டு இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துப் பெற்றுக் கொண்டனர்.
தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தனது நடிகை ரேவதி நடிப்பால் அசத்தியிருக்கிறார்.
இந்நிலையில், தற்போது ரேவதி Tooth Pari: When Love Bites என்ற வெப் சீரிஸில் நடித்து இருக்கிறார். இது நெட்பிலிக்ஸ் தளத்தில் வரும் ஏப்ரல் 20ம் தேதி இந்த சீரிஸ் வெளியாக உள்ளது.
இது Vampire-கள் பற்றிய கதை என்பதால் முதலில் இதில் நடிக்க யோசித்ததாக ரேவதி தெரிவித்து இருந்தார். இதுகுறித்து தற்போது வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் ரேவதி அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார். அதன் ஸ்டில்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
This website uses cookies.