80 காலகட்டத்தில், நடிகை சுஹாசினி பிரபல நடிகையாக வலம் வந்தார். இவர் கோபுரங்கள் சாய்வதில்லை, சிந்து பைரவி போன்ற படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பல விருதுகளை குவித்தார்.
இதனிடையே, சுஹாசினி 1988 -ம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினத்தை திருமணம் செய்து கொண்டு, தற்போது சுஹாசினி ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
இதனிடையே, 80ஸ்-களில் நடிகை ரேவதி இளைஞர்கள் மனதில் கனவுக்கன்னியாக இடம்பிடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகை ரேவதி.
மண்வாசனை, தேவர் மகன், மௌனராகம், புதுமை பெண் என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளிவந்த நவரசா ஆந்தாலஜி சீரிஸில் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் ரேவதி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த காலத்தில் இருந்த பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து வந்த நடிகை ரேவதி. தன்னுடைய கலக்கலான திரைப்படங்களை கொடுத்து வந்த நிலையில், மலையாள இயக்குனரான சுரேஷ் சந்திர மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு, 2013 ஆம் ஆண்டு இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துப் பெற்றுக் கொண்டனர்.
அப்போது தமிழ் சினிமாவில் ரேவதிக்கு அதிக மார்க்கெட் இருந்தது. ரேவதியின் சுட்டித்தனமான குணமும், அவரது சின்ன முகமும் தொடர்ந்து அவர் கதாநாயகியாக இருப்பதற்கான வாய்ப்புகளை அதிகரித்த சமயத்தில், மற்ற கதாநாயகிகளுக்கு வரும் படங்களும் கூட பிறகு ரேவதிக்கு கைமாறிய நிகழ்வுகளும் நடந்தன.
இந்த நிலையில் தான் சுஹாசினிக்கு சிவாஜி கணேசனுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது மிக பெரும் ஆசையாக இருந்ததாகவும், அதற்காக பல நாட்களாக சுஹாசினி காத்திருந்தார். அந்த நேரத்தில் லட்சுமி வந்தாச்சு என்கிற திரைப்படத்தில் நடிப்பதற்கான சுஹாசினி வாய்ப்பை பெற்றார். அந்த படத்தில் சிவாஜி கணேசனும் நடிக்க இருந்ததால் அவருடன் நடிக்க போகிறோம் என்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்த சுஹாசினிக்கு, கடைசி நேரத்தில் அந்த படம் ரேவதிக்கு கை மாறியது தெரிந்து மிகவும் வருத்தப்பட்டாராம்.
அதன் பிறகு நடிக்க தான் வாய்ப்பு கிடைக்கவில்லை. சிவாஜியை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என்று நினைத்து கடைசிவரை அதுவும் அவரால் முடியாமல் போய்விட்டது எனவே சிவாஜியுடன் நடிக்க வேண்டும் என்கிற ஆசை சுஹாசினிக்கு நிராசையாகவே போனதற்கு முக்கிய காரணம் லட்சுமி வந்தாச்சு படத்தின் வாய்ப்பு பறிபோனதே காரணம் என இதை சுஹாசினியே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.