கஜோல் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை இயக்கவிருக்கும் தமிழ் நடிகை..!

Author: Rajesh
9 October 2021, 12:45 pm
Quick Share

இந்தியில் உச்சநட்சத்திரமாக இருப்பவர் கஜோல். பாலிவுட்டில் பல படங்கள் நடித்துள்ளார். தமிழில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த படம் மின்சார கனவு படத்தில் கதாநாயகியாக நடித்தார். அவரது நடிப்பால் தமிழ் ரசிகர்கள் அவரை ஏகபோகமாக ரசித்து வந்தனர்.

அதன்பின் தமிழில் நடிக்கவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் தமிழில் தனுஷுடன் vip 2 படத்தில் வில்லியாக நடித்தார். இந்நிலையில் கஜோல் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை பற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அவரது அடுத்த படத்தை நடிகை ரேவதி இயக்கவுள்ளார். நடிகை ரேவதி 90களில் தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கியவர். இப்போதும் அவருக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது.

நடிகை ரேவதி ஏற்கனவே நான்கு படங்கள் இயக்கியுள்ள நிலையில் தற்போது கஜோலை வைத்து இயக்க இருப்பது அவரது ஐந்தாவது படமாகும். இந்த செய்தியை நடிகை கஜோல் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடந்து வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Views: - 396

0

0