மலையாளத்தில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ரின்னி அன் ஜார்ஜ். இவர் பத்திரிக்கையாளராக இருந்து அதன் பின் நடிகையாக மாறியவர். இந்த நிலையில் இவருக்கு கேரளாவைச் சேர்ந்த ஒரு பிரபல அரசியல்வாதி ஆபாச மெசேஜ்கள் அனுப்பி ஹோட்டலுக்கு அழைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பல நாட்களாக ரினி அன் ஜார்ஜ்ஜுக்கு அந்த பிரபல அரசியல்வாதி இவ்வாறு ஆபாசமான மெசேஜ்கள் அனுப்பி வருகிறாராம். ரினி அன் ஜார்ஜ் அந்த அரசியல்வாதியை கண்டித்தும் அவர் அவ்வாறு மெசேஜ் அனுப்புவதை நிறுத்தவில்லையாம். கட்சி மேலிடத்தில் புகார் அளித்துவிடுவேன் என ரினி அன் ஜார்ஜ் மிரட்டிப்பார்த்தும் கூட அவர் அவ்வாறு மெசேஜ் அனுப்புவதை நிறுத்தவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் ரினி அன் ஜார்ஜ் அந்த பிரபல அரசியல்வாதியின் பெயரை குறிப்பிடாமல் பிரபல அரசியல்வாதி ஒருவர் தனக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்புவதாக வெளிப்படையாக போட்டுடைத்துள்ளார்.
ரினி அன் ஜார்ஜ் தனக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய அரசியல்வாதியின் பெயரை குறிப்பிடவில்லை. ஆனாலும் கேரள பாஜகவினர் கேரளா மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவரும் பாலக்காடு எம் எல் ஏவுமான ராகுல் மம்கூட்டத்தில் என்பவர்தான் இவ்வாறு ஆபாசமாக மெசேஜ் செய்தது என அவருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து ராகுல் மம்கூட்டத்தில் தனது மாநில காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். “ராஜினாமா செய்வதால் என் மீது தவறு இருக்கிறது என நினைக்க வேண்டாம். ரினி அன் ஜார்ஜ் எனது நெருங்கிய தோழி, எனக்கு எதிராக கூறப்பட்ட புகார்களை நான் நம்பவில்லை. எதுவாக இருந்தாலும் சட்ட ரீதியாக அதனை எதிர்கொள்வேன்” என விளக்கம் அளித்துள்ளார். இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.