வயசு வித்யாசம் பார்க்காமல் சுரேஷ் சக்கரவர்த்தியை கைநீட்டி திட்டிய ரியோ ! வெளியான Big Boss Promo !

Author: Poorni
12 October 2020, 12:41 pm
Quick Share

முதலில் சன் மியூசிக்கில் சொல்லுங்க உங்களுக்கு என்ன பட்டு வேண்டும் என கேட்டு கொண்டிருந்தவர் அங்கிருந்து ஷிஃப்ட் ஆகி விஜய் டிவிக்கு வந்தார், அப்படியே தனது திறமையால் தொகுப்பாளராக இருந்த ரியோ சரவணன் மீனாட்சி தொடரில் ஹீரோவாக நடித்தார். மறுபடியும் 5ல் குரு பார்க்க சிவகார்த்திகேயன் தயாரிப்பில், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகி நடித்தார். இந்த படம் சிவகார்த்திகேயனை கையை சுட்ட நிலையில்,

தற்போது ‘பானா காத்தாடி’ இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் பிளான் பண்ணி பண்ணனும் என்கிற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்தநிலையில், கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4வது சீசனில் பங்கேற்ற இவர், சாண்டி போல் நகைச்சுவைக்கு நகைச்சுவையும் கோபப்பட வேண்டிய நேரத்தில் தன்னுடைய உணர்ச்சிகளையும் கள்ளங்கபடம் இல்லாமல் காட்டுகிறார் ரியோ. இதனால் சில நாட்களிலேயே தனக்கென்று சில ரசிகர்களை இந்த நிகழ்ச்சியின் மூலம் சம்பாதித்துள்ளார். ஆனால் இன்று வெளியான Promo-வில், பாலாஜி முருகதாஸ் சுரேஷ் சக்கரவர்த்தியிடம், “இந்த வீட்டில் யார் முகமூடி போட்டுக் கொண்டிருக்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்று பாலாஜி முருகதாஸ் சுரேஷ் சக்ரவர்த்தியிடம் கேட்க உடனே அவர், ரியோவை ஜாடைமாடையாக சொல்ல கோபப்பட்ட ரியோ, “அப்படி சொல்ல கூடாது” என்று கை நீட்டி பேச ஆரம்பிக்கிறது சண்டை. என்னதான் இருந்தாலும் வயதிற்கு மரியாதை கொடுத்து இருக்கலாம் என்று இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள்.

Views: - 45

0

0