சினிமா / TV

தனது புது பெயரை அறிவித்த ஆர் ஜே பாலாஜி? சூர்யா 45 டைட்டில் போஸ்டரால் உருவான ஆச்சரியம்!

சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்து வரும் நிலையில் இவர்களுடன் யோகி பாபு, ஷிவதா, சுவாஸிகா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இத்திரைப்படத்திற்கு முதலில் ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் இத்திரைப்படத்தில் இருந்து விலகினார். அதன் பின் சாய் அப்யங்கர் இத்திரைப்படத்தின் இசையமைப்பாளராக உள்ளே நுழைந்தார். இத்திரைப்படத்தை எஸ் ஆர் பிரபு தயாரித்து வருகிறார்.

இதனிடையே இத்திரைப்படம் கருப்பசாமி தெய்வத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட கதையம்சத்தில் உருவாகி வருவதாக தகவல் வெளிவந்தது. மேலும் இத்திரைப்படத்திற்கு “வேட்டை கருப்பு” என்று தலைப்பு வைத்துள்ளதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் தலைப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.  இத்திரைப்படத்திற்கு “கருப்பு” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி என்ற பெயர் இருக்கும் இடத்தில் R J B என்று இடம்பெற்றுள்ளது. தனது பெயரை சுருக்கி RJB என்று வைத்துள்ளார் ஆர்ஜே பாலாஜி. இப்பெயர் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.  

Arun Prasad

Recent Posts

அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்

கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…

7 hours ago

திமுக அரசுக்கு எதிராக பேசுவதால் என் மீது வழக்கு தொடுக்க சதி நடக்கிறது : எம்எல்ஏ பரபரப்பு புகார்!

வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…

7 hours ago

வெறித்தனமான அப்டேட்! விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி?

விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…

8 hours ago

ஏதாவது ஒரு ஆக்ஷன் எடுப்பாங்க… மா விவசாயி போராட்டம் குறித்து அமைச்சரின் அலட்சிய பதில்!

வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…

8 hours ago

கூலி படத்தின் பிசினஸை அசால்டாக தட்டிவிட்டு ஓவர்டேக் செய்த ஜனநாயகன்? செம டிவிஸ்ட்டா இருக்கே!

கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…

8 hours ago

அதிமுகவை சீண்டுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள் : விஜயபாஸ்கர் ஆவேசம்!

திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…

9 hours ago

This website uses cookies.