பாலிவுட் படத்தை தமிழில் ரீமேக் செய்யும் நயன்தாரா பட இயக்குநர் ஆர் ஜே பாலாஜி!

1 March 2021, 9:09 pm
Quick Share

பாலிவுட்டில் வெளியான பதாய் ஹோ என்ற படத்தை இயக்குநர் ஆர் ஜே பாலாஜி தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான படம் பதாய் ஹோ. இந்தப் படத்தில் ஆயுஷ்மான் குரானா, சன்யா மல்ஹோத்ரா, நீனா குப்தா, ஹஜ்ரஜ் ராவ், சுரேகா சிக்ரி, அல்கா கௌசால் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். முழுக்க முழுக்க காமெடி கதையை மையப்படுத்தி திரைக்கு வந்த இந்தப் படம் ரூ.220 கோடி வரையில் வசூல் குவித்தது.

இப்படியொரு சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை தமிழில் ரீமேக் செய்ய நம்ம மூக்குத்தி அம்மன் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி திட்டமிட்டுள்ளார். அதோடு, இந்தப் படத்தை இயக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.

பதாய் ஹோ தமிழ் ரீமேக் பட த்திற்கு வீட்ல விஷேசங்க என்று டைட்டில் வைக்கவும் ஆர் ஜே பாலாஜி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறது.

Views: - 310

0

0