தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பல தரப்பில் இருந்து தொல்லைகள், அட்ஜெஸ்ட்மென்ட் கொடுமை எல்லாமே இருக்கத்தான் செய்கிறது. அதற்கெல்லாம் ஒப்புக்கொண்டு அட்ஜெஸ்ட் செய்து நடிக்கும் நடிகைகள் மட்டுமே மார்க்கெட்டில் நிலைத்து நிற்க முடியும் என்ற ஒரு மறைமுக நிபந்தனைகள் திரைத்துறையில் இருப்பது தான் அந்த தொழிலையே இழிவுபடுத்திக்கிறது.
அப்படித்தான் ஒரு சம்பவம் தற்போது நடிகை ஹன்சிகாவுக்கு நடந்துள்ளது… ஆம் நடிகை ஹன்சிகா மோத்வானி – நடிகர் ஆதி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் பார்ட்னர். இப்படத்தில் யோகிபாபு, முனீஸ்காந்த், ரோபோ சங்கர், ஜான் விஜய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகியது.
இந்த ட்ரைலர் வெளியீட்டுவிழாவில் ஹன்சிகாவுடன் நடித்தது குறித்து பேசிய நடிகர் ரோபோ ஷங்கர், படத்தில் நான் ஹன்சிகா காலை தடவுற மாதிரி ஒரு காட்சி படத்துல இருந்தது. ஒரு பொருளை தேடி முட்டிக்கு கீழ் கால தடவனும், அது தான் சீன். அந்த காட்சியில் நடிக்க வைக்க நானும் போராடி பார்த்தேன். ஆனா முடியவே முடியாதுனு சொல்லிட்டாங்க. நானும் டைரக்டரும் கால்ல விழுந்துலாம் கெஞ்சினோம். கட்டை விரலையாச்சும் தடவிக்கிறேன்னு கேட்டோம். முடியவே முடியாதுன்னு சொல்லிட்டாங்க.
மேலும் ஹீரோ ஆதி மட்டும் தான் என்னை தொட்டு நடிக்கனும், வேற யாரும் தொடக்கூடாதுனு சொல்லிட்டாங்க. அப்போதான் நினைச்சேன்.. ஹீரோ ஹீரோ தான், காமெடியன் ஓரமா தான் இருக்கனும் போல என மிகவும் கீழ்த்தரமாக இழிவாக பேசியிருந்தார். இப்படிதான் சினிமா துறையில் பல நடிகைகளிடன் நடிகர்கள் அத்துமீறுகிறார்கள் என சர்ச்சை வெடித்துள்ளது. மேலும் ஒரு பொது மேடையில் இப்படியா பேசுவரது என ரோபோ ஷங்கருக்கு கண்டனங்கள் வலுத்தது. ரோபோ ஷங்கரின் பேச்சுக்கு பத்திரிகையாளர் ஒருவர், ” நடிக்கவே லாயக்கு இல்லாத நடிகரை எல்லாம் மேடையில் ஏத்தினா இப்படித்தான் பேசுவாங்க என திட்டனார். இதையடுத்துப் பாட்னர் படக்குழு சார்பில் ரோபோ சங்கரின் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக ஜான் விஜய் தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.