விக்ரம் மகன் துருவுக்கு ஜோடியா?சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் ரோஜாவின் மகள் பற்றிய உண்மையை உடைத்த தந்தை செல்வமணி..! இப்படி ஆயிடுச்சே..!

Author: Vignesh
3 October 2022, 1:00 pm
Quick Share

நடிகர் விக்ரமின் மகன், துருவ் விக்ரமுக்கு ஜோடியாக பிரபல நடிகையும், அரசியல்வாதியுமான ரோஜாவின் மகள் அன்ஷு மாலிகா தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் பரவிய நிலையில், உண்மை என்ன என்பதை உடைத்து கூறியுள்ளார் செல்வமணி.

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக அறிமுகமாகியுள்ள, நடிகர் விக்ரமின் மகன் துருவ் தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்ட, ‘ஆதித்ய வர்மா’ படத்தில் நடித்தார். 2019-ம் ஆண்டு வெளியான நிலையில், கலவையான விமர்சனங்களோடு படுதோல்வியை சந்தித்தது. தெலுங்கில் வெற்றி பெற்ற இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு இல்லை என்பதே… இந்த படத்தின் தோல்விக்கு காரணம். எனினும் இந்த படத்தில் துருவ் நடிப்பு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றது.

இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘மகான்’ படத்தில் தன்னுடைய தந்தை, விக்ரமுடன் சேர்ந்து நடித்திருந்தார். முதல் முறையாக விக்ரமுடன் நடித்தார் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம், எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறாமல் போனது.

எப்படியும் வெற்றி படத்தை கொடுத்து, தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க போராடி வரும், துருவ் தற்போது பரியேறும் பெருமாள், கர்ணன் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா.இரஞ்சித் தயாரிக்க உள்ள படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். இப்படத்தில் அவர் கபடி வீரராக நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து துருவ் நேரடி தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான, ரோஜா செல்வமணியின் மகள் அன்ஷு மாலிகா நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இந்த தகவல் குறித்து தற்போது செல்வமணி விளக்கம் கொடுத்துள்ளார். தன்னுடைய மகள் அன்ஷு மாலிகா… மேற்படிப்பிற்காக தற்போது அமெரிக்கா சென்றுள்ளதாகவும், எனவே தன்னுடைய மகள் திரையுலகில் நடிக்க வருவதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என கூறியுள்ளார். ஒருவேளை நடிக்க வந்தால் கூட நான்கு வருடங்களுக்கு பிறகே நடிக்க வருவார் என இதன்மூலம் தெளிவு படுத்தியுள்ளார் செல்வமணி.

  • Gold - Updatenews360 தங்கம் விலை சரிந்தது.. நகை வாங்க சரியான நேரம் : இன்றைய விலை நிலவரம்!!
  • Views: - 562

    0

    0