ரௌடி பேபி பாடல் தனுஷுக்கு எவ்வளவு கோடி சம்பாத்திது இருப்பார் தெரியுமா ?

17 November 2020, 5:41 pm
Quick Share

எத்தனை வருடங்கள் ஆனாலும் சில பாடல்கள் தொடர்ந்து ரசிகர்களால் கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முக்கிய பாடலாக இடம் பெறுகிறது மாரி 2 திரைப்படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல்.

இந்தப் பாடல் வெளியாகி 2 வருடங்கள் ஆனாலும் ஆகியும் இந்தப் பாடலுக்கான மவுசு இன்றளவும் குறையவில்லை என்றே கூற வேண்டும். தற்போது 3 படத்தின் பாடலான “கொலைவெறி De” 250 M பார்வையாளர்களை எட்டிய நிலையில், இந்த ரவுடி பேபி பாடல் 100 கோடி பார்வையாளர்களுக்கு மேல் தாண்டியுள்ளது.

லிரிகல் வீடியோ 80 கோடியை தாண்டியுள்ளது. இந்தப் பாடலின் மேக்கிங் வீடியோ ஒரு கோடியை தாண்டி விட்டது. கிட்டத்தட்ட இந்த ஒரு பாடல் வீடியோ மூலமாக 5 முதல் 10 கோடி வரை லாபம் தனுஷின் நிறுவனம் பார்த்துள்ளது.

இதுமட்டுமல்லாமல் தெலுங்கில் ரீ-மேக் செய்து வெளியிடப்பட்ட ரவுடி பேபி பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது கூடுதல் தகவல் !