ஆர்.எஸ். சிவாஜி என்பவர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்களில் பெருவாரியாக நடித்துள்ளார். கமலஹாசன் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சம்பந்தப்பட்ட படங்களில் இவர் மிகுதியாக நடித்துள்ளார். இவர் உதவி இயக்குனராகவும், வடிவமைப்பாளராகவும் குணச்சித்திர நடிகராகவும் பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
நடிகரும் தயாரிப்பாளருமான எம். ஆர். சந்தானத்தின் மகன்தான் ஆர். எஸ். சிவாஜி. இவரது சகோதரரான சந்தான பாரதியும் பிரபல நடிகரும், திரைப்பட இயக்குனரும் ஆவார்.
ஆர். எஸ். சிவாஜி முதன்மையாக நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். 1980 களில் மற்றும் 1990 களில் கமல்ஹாசனின் படங்களில் தவறாமல் நடித்தார். இவர் சார்! நீங்க எங்கயோ போயிட்டீங்க என்று அபூர்வ சகோதரர்கள் (1989) படத்தில் ஜனகராஜை பார்த்து பேசிய வசனம் புகழ்பெற்றது. பின்னர் பல தமிழ் திரைப்படங்களில் இந்த வசனத்தைக் கொண்டு கேலிசெய்யப்பட்டு வருகிறது.
இவர் நயன்தாராவின் தந்தையாக கோலமவு கோகிலா படத்திலும், விவேக்கின் உதவியாளராக தாராள பிரபு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘கார்கி’ திரைப்படத்தில் ஆர்.எஸ்.சிவாஜியின் நடிப்பு பாராட்டை பெற்றது. இந்நிலையில், 66 வயதான ஆர்.எஸ்.சிவாஜி இன்று உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக ஆர் எஸ் சிவாஜி கமலஹாசன் குறித்து பேட்டி அளித்திருந்தார். அதில், நான் உயிரோடு இருப்பதற்கு காரணம் கமல்தான் என்றும், நன்றியை மறக்க மாட்டேன் என் இதயத்தில் நாலு ஓட்டைகள் இருந்தது. சிகிச்சைக்கு தான் உதவி கேட்டேன். எனக்கான எல்லா சிகிச்சையும் அவரே பார்த்துக் கொண்டார்.
அதேபோல் கொரோனா காலத்தில் மாத்திரைகள் வாங்கு வதற்கு காசு இல்லை தயக்கமாக இருந்தது. அதனால் நேராக சென்று அவரிடம் உதவி கேட்டேன். அப்போது முதல் இப்போது வரை எனக்கு ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திலிருந்து மாத மாதம் மாத்திரைகள் வந்து கொண்டிருக்கிறது. கமல் இல்லை என்றால் நான் இல்லை. மாதக் கடைசியில் கூட போன் செய்து கேட்டு வாங்கி கொடுப்பார்கள் என்று தெரிவித்திருந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…
மனைவியை கொலை செய்ய மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொன்ற ஜிம் மாஸ்டரின்…
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
This website uses cookies.